ஆஸ்திரேலியாவின் சாம் கான்ஸ்டாஸ் ஐபிஎல்லில் எந்த அணியில் விளையாடுகிறார் தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக்கில் ஆஸ்திரேலியா இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸை பார்க்க பலரும் ஆர்வமாக  உள்ளனர். ஆனால் அதற்கு இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

1 /6

பார்டர்-கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமானார் சாம் கான்ஸ்டாஸ். 19 வயதான அவர் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினார்.

2 /6

நாதன் மெக்ஸ்வீனிக்கு பதிலாக இந்தியாவிற்கு எதிரான மீதமுள்ள இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் 3 போட்டிகளில் இவர் இடம் பெறவில்லை.

3 /6

இவ்வளவு இளம் வயதில் எப்படி ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது என்பதை தனது முதல் இன்னிங்ஸிலேயே நிரூபித்தார் சாம் கான்ஸ்டாஸ்.

4 /6

65 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 60 ரன்கள் அடித்தார். குறிப்பாக பும்ராவின் பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தி இருந்தார். இதனால் ஒரே போட்டியில் பிரபலமானார்.

5 /6

மேலும் விராட் கோலி மற்றும் சாம் கான்ஸ்டாஸ் இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்காக விராட் கோலிக்கு 20% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  

6 /6

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சாம் கான்ஸ்டாஸ் இடம் பெறவில்லை. இருப்பினும், இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் தனது திறமையை நிரூபித்துள்ளதால் அடுத்த ஏலத்தில் நிச்சயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.