உலக கோப்பை 2023: நடப்பு உலக்கோப்பை போட்டியில் இந்தியா தனது பயணத்தை இன்று முதல் தொடங்கியுள்ளது. ஐசிசி உலக கோப்பையை 5 முறை வென்ற சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கத்தில் எதிர்கொண்டுள்ளது. 13வது உலக கோப்பையை நடத்துவது இந்தியாவாக இருந்தாலும், இந்த தொடரில் இன்று தான் முதல் ஆட்டத்திலேயே விளையாடுகிறது இந்திய அணி. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரோகித் சர்மா பேட்டி



இந்திய அணியில் எதிர்பார்தது போலவே டெங்கு காய்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் சுப்மான் கில் விளையாடவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டிருக்கிறார். இது குறித்து ரோகித் சர்மா பேசும்போது, இன்று காலை வரை சுப்மான் கில்  உடல்நிலையை கவனித்து வந்தோம். ஆனால் அவருக்கு எதிர்பார்த்தளவுக்கு இன்னும் காய்ச்சல் குறையவில்லை. சுப்மான் கில்லுக்கு பதிலாக இஷான் கிஷன் அணியில் இடம்பெற்று ஓப்பனிங் ஆட இருக்கிறார். 


மேலும் படிக்க | உலக கோப்பை: அஸ்வின் ஓப்பனிங் பேட்டிங் இறக்க ரோகித் திட்டம்? பிளேயிங் லெவன் இதுதான்


சென்னை மைதானம் எப்படி?


சென்னை மைதானத்தைப் பொறுத்தவரை பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானது. குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும். இதுவரை இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிகம் வெற்றி பெற்றிருக்கின்றன. 13 போட்டிகளில் முதலில் ஆடிய அணிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. 8 முறை சேசிங் செய்த அணி வெற்றி பெற்றிருக்கிறது. 


சேப்பாக்கத்தில் இரு அணிகளின் வரலாறு


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளைப் பொறுத்தவரை மூன்று போட்டிகளில் இங்கு மோதியிருக்கின்றன. அதில் 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும், ஒருமுறை இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 1987 உலக கோப்பை போட்டியும் அடங்கும். 


- 9 அக்டோபர் 1987 - ஆஸ்திரேலியா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
- 17 செப்டம்பர் 2017 - இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
- 22 மார்ச் 2023 - ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது


ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்


இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்


மேலும் படிக்க | India vs Australia: உலக கோப்பை போட்டியின் போது மழை குறுக்கிடுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ