WTC Points Table: அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டுக்கு பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பார்டர்-கவாஸ்கர் டிராபியின் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த WTC சுழற்சியில் 9வது வெற்றியுடன், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி 60.71 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வலுவான நிலையில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்திய அணியின் மோசமான பவுலிங்! ஷமியை ஆஸ்திரேலியா அழைத்த பிசிசிஐ!


தற்போது 59.26 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது தென்னாப்பிரிக்கா. அடுத்த டெஸ்டில் வெற்றி பெரும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற முடியும். மறுபுறம், இந்திய அணி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. முதல் இடத்தில் இருந்த இந்தியா 57.29 ஆக சரிந்தது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு தகுதி பெற மீதுள்ள 3 டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டும். இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து தான் இந்தியாவின் பைனல் வாய்ப்பு இருக்கும்.


பதிலடி கொடுத்த இந்தியா


முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலியா மீண்டு வந்துள்ளது. அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது. 2வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஸ்டார்க்கின் வேகத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிறகு பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 337 ரன்களை அடித்தது. மேலும் 157 ரன்கள் முன்னிலை பெற்றது. கடினமான கட்டத்தில் 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தது. 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது.


இந்தியா WTC பைனலுக்கு செல்லுமா?


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்துள்ளதால் WTC இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பார்டர்-கவாஸ்கர் தொடர் தொடங்குவதற்கு முன்பு, இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 0-3 என இழந்தது. இதனால் WTC இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கணக்கில் தோற்கடிக்க வேண்டும். முதல் டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தாலும், இரண்டாவது போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்வி WTC பைனல் வாய்ப்பை கடினமாக்கி உள்ளது. மீதலுள்ள 3 டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.


மேலும் படிக்க | பணத்திற்காக வெளியேறிய ரிஷப் பண்ட் - டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் பளீச்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ