India vs Bangladesh: ஷுப்மான் கில் தனது முதல் சர்வதேச சதத்தை அடிக்க மூன்று ஆண்டுகள் ஆனது. தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கிடைக்கும் போது எல்லாம், சிறப்பாக ஆடி வருகிறார்.  இந்த ஆண்டு ஆகஸ்டில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் 130 ரன்கள் அடித்து அசத்தினார்.  இருப்பினும் அவரது காத்திருப்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்தது. சட்டோகிராமில் நடந்த இந்தியா vs வங்காளதேசம் முதல் டெஸ்டின் 3வது நாளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஒரே போட்டியில் இப்படி ஒரு சாதனையா? இந்திய வீரரின் அதிரடி!


கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாட வில்லை. அவருக்கு பதிலாக கில்லுக்கு வாய்ப்பு கிடைத்தது.  தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அவர் மூன்று சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் உட்பட 72 ஸ்டிரைக் ரேட்டில் தனது 110 ரன்களை எடுத்தார்.  கில் சதம் அடித்ததை கோலி மற்றும் ராகுல் உற்சாகமாக கொண்டாடினர்.




கில்லின் அட்டாக்கிங் சதம், 130 பந்துகளில் தனது அதிவேக டெஸ்டில் சதம் அடித்த சேட்டேஷ்வர் புஜாராவின் ஆட்டம் இந்தியாவை முதல் டெஸ்டில் ஆதிக்கம் செலுத்த வைத்துள்ளது.  இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை 258/2 என டிக்ளேர் செய்து, வங்கதேசத்திற்கு 513 என்ற மிகப்பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது.  இன்னும் 2 நாட்கள் மீதம் உள்ள நிலையில் வங்கதேச வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெரும்.


மேலும் படிக்க | 'அவரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்' விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய டிராவிட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ