'அவரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்' விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய டிராவிட்

விராட் கோலி, இந்திய அணியின் பல இளம் வீரர்களுக்கு பாடமாக உள்ளார் என தலைமை பயிற்சியாளர் டிராவிட் தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 16, 2022, 09:58 AM IST
  • முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
  • வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
  • வங்கதேசத்தை பாளோ ஆன் செய்யும் முயற்சியில் இந்திய பந்துவீச்சாளர்கள் முயல்வார்கள்.
'அவரை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்' விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய டிராவிட்  title=

இந்திய வங்கதேசம் அணிகள் தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. 

காயம் காரணமாக ரோஹித் சர்மா முதல் போட்டியில் இருந்து விலகியதால், கேஎல் ராகுல் கேப்டனாக பொறுப்பேற்றார். இதனையடுத்து, டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய முதல் இன்னிங்ஸில் 404 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களையும், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களையும் எடுத்தனர். தய்ஜுல் இஸ்லாம், மெகிடி ஹாசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, வங்கதேச அணியை தனது பேட்டிங்கை தொடங்கியது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால், வங்கதேச அணியின் பேட்டர் தடுமாறினார்கள். குறிப்பாக குல்தீப் யாதவின் சுழலில் சிக்கி, அவர்கள் வரிசையாக பெவிலியன் திரும்பினர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், வங்கதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்து, இந்திய அணியை விட 271 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

மேலும் படிக்க | அர்ஜூனை காதலிக்க அனுமதியுங்கள்... ஊடகங்களுக்கு சச்சின் மெசேஜ்!

இந்நிலையில், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சீனியர் வீரர் விராட் கோலியை புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து, பிசிசிஐ வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் அவர் கூறுகையில்,"எப்போது ஆக்ரோஷமாக இருக்க வேண்டும், எப்போது ஆட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை விராட் கோலி அறிவார். 

அவரின் செயல்திட்டத்தை நம்மால் நம்ப முடியாது. அவர் ஆட்டத்தை கட்டமைக்க ஆரம்பித்துவிட்டால், அது எங்களுக்கு ஒரு நல்ல அறிகுறியாக இருக்கும். 50 ஓவர் கிரிக்கெட்டில் விராட் நம்பமுடியாத ஆட்டத்தைக் கொண்டுள்ளார். அவரது சாதனையே அதனை விளக்கும். அவர் விளையாடிய ஆட்டங்களின் எண்ணிக்கையும் அபாரமானது. 

விராட் கோலி திரும்பி தன்னுடைய ஆட்டத்தை மீட்டெடுத்துவிட்டதாக உணர்கிறார். நான் அவரை பார்க்கும்போதெல்லாம் அவர் கடினமாக பயிற்சி செய்கிறார். என்னைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு அவர் பயிற்சி பெறுவதைப் பார்ப்பது சிறப்பாக இருந்தது. அவர் சிறப்பாக செயல்படுகிறாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் பயிற்சி எடுப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தவார். அணியில் உள்ள பல இளம் வீரர்களுக்கு இது ஒரு சிறந்த பாடம்" என்றார். 

விராட் கோலி, வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இடதுகை சுழற்பந்துவீச்சாளர் தய்ஜூல் இஸ்லாம் பந்துவீச்சில் அவர் கிளீன் போல்டானார். எனவே, நேற்றைய தேநீர் இடைவேளையில் கூட, நெட் பௌலரான இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சவுரப் குமாரின் பந்துவீச்சில் விராட் கோலி பயிற்சி எடுத்தது வைரலானது. 

மேலும் படிக்க | IPL Mini Auction : ஐபிஎல் ஏலத்தில் கிறிஸ் கெயில்... நாயகன் மீண்டும் வரார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News