இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி புனேயில் இன்று மதியம் 1:30 மணிக்கு  நடக்க உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி புனேயில் இன்று நடக்கிறது. இதையொட்டி இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


விராட் கோலி இந்திய அணியை வழிநடத்த இருப்பதாலும்,  யுவராஜ்சிங் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பதும் ரசிகர்களை மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. டெஸ்டில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாளை பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்கும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, 3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


இந்தியா:


லோகேஷ் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ரஹானே, யுவராஜ்சிங், டோனி, அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, கேதர் ஜாதவ் அல்லது ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார் அல்லது உமேஷ் யாதவ்.


இங்கிலாந்து:


ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலெஸ், ஜோ ரூட், சாம் பில்லிங்ஸ், மோர்கன் (கேப்டன்), பேர்ஸ்டோ அல்லது ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித் அல்லது டாவ்சன்.