இந்தியா - இங்கிலாந்து 2வது டெஸ்ட்: உணவு இடைவேளை வரை 92/2
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான _2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய
கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி லோகேஷ் ராகுல் டக் அவுட்டானார். முரளி விஜய் 20 ரன்கள் எடுத்து அவுட்னார்மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் விராத் கோலி 35, புஜாரா 37 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கு இது 50-வது டெஸ்ட் போட்டி. ஆகும். அமித் மிஸ்ராவுக்குப் பதில் ஜெய்ந்த் யாதவ் அறிமுகமாகியிருக்கிறார். கவுதம் காம்பீர் நீக்கப்பட்டு ஆடும் லெவனில் லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.