இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி டி-20 ஆட்டம் பெங்களூரில் இன்று நடக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இந்தியா-இங்கிலாந்து இரு அணிகளுமே 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரை வெல்வது யார் என்று ஆவலுடன் ரசிகர்கள் இருப்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.


விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இதேபோல இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரையும் கைப்பற்ற இந்திய ஆர்வத்துடன் இருக்கிறது. இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும்.


இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ரெய்னா, யுவராஜ்சிங், டோனி, மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா, யுசுவேந்திர சகால், ஆசிஷ் நெக்ரா, பும்ரா, பர்வேஷ் ரசூல், புவனேஷ்வர் குமார், ரிஷப் பண்ட், மன்தீப் சிங்.


இங்கிலாந்து அணி: மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், சாம் பில்லிங்ஸ், ஜோரூட், பென் ஸ்டோக்ஸ், பட்லர், மொயின் அலி, ஜோர்டான், ஆதில் ரஷீத், மில்ஸ், டேவிட் வில்லி, பேர்ஸ்டோவ், ஜேக்பால், புளுன்கெட், டாசன்.