இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 310 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடுகிறது. இதில் அஸ்வினுக்கு பதிலாக பீல்டிங் செய்த தேவ்தத் படிக்கல் பேட்டிங் செய்ய முடியுமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஸ்வின் ஏன் விலகினார்?


மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பேட்டிங் விளையாடினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் பந்துவீச்சில் ஒரு விக்கெட் எடுத்திருந்தார். மாலை பெவிலியனுக்கு சென்றபோது அவரது தாயார் உடல்நிலை சரியில்லை என்ற தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக இந்த தகவலை பிசிசிஐக்கு தெரிவித்த அவர், போட்டியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்திருக்கிறார். அவரின் இந்த முடிவை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ, அஸ்வின் சென்னை திரும்புவதற்கும் ஏற்பாடு செய்தது. அத்துடன் அவருக்கு தேவையான உதவிகளை செய்யவும் தயாராக இருப்பதாக அறிவித்தது. இப்போது அஸ்வின் சென்னையில் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து தாயை கவனித்துக் கொண்டிருக்கிறார்.


மேலும் படிக்க | துருவ் ஜூரல்: கார்கில் வீரரின் மகன், அம்மா நகைகளை அடகு வைத்து கிரிக்கெட் கிட் வாங்கிய இளைஞர்..!


மாற்று வீரராக இறங்கிய தேவ்தத் படிக்கல்



இதனையடுத்து இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 10 பிளேயர்களுடன் மட்டும் இரண்டாவது இன்னிங்ஸை விளையாட இருக்கிறது. பீல்டிங்கில் மாற்று வீரராக தேவ்தத் படிக்கல் களமிறக்கப்பட்டார். ஆனால் பேட்டிங்கில் விளையாட அவருக்கு வாய்ப்பு இருக்கிறதா? என்றால் அதற்கு இடமில்லை. இந்திய அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் 9 வீரர்கள் மட்டுமே பேட்டிங் விளையாடுவார்கள்.


தினேஷ் கார்த்திக் கொடுத்த சர்பிரைஸ்


இதனிடையே அஸ்வின் மீண்டும் இந்திய அணியுடன் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கமெண்டரியில் இருந்த தினேஷ் கார்த்திக் தெரிவித்தார். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிக்கு கமெண்டரி செய்து கொண்டிருந்த அவர், அஸ்வின் மீண்டும் ராஜ்கோட் வர இருப்பதாகவும், அப்படி வரும்போது அவர் நேரடியாக பந்துவீச வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார். இதற்கு கள நடுவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகவும் தினேஷ் கார்த்திக் தெரிவிததார். இருப்பினும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட் ஆகும் வரை அஸ்வின் களத்துக்கு வரவில்லை. 


மேலும் படிக்க | ஜடேஜா செய்த டாப் கிளாஸ் சாதனைகள்... கபில்தேவ், அஸ்வின் பட்டியலில் சேர்ந்த ஜட்டு..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ