Ravichandran Ashwin: ஐசிசி கடந்த புதன்கிழமை டெஸ்ட் தரவரிசை பட்டியலை வழங்கியது.  இதில் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் பட்டியலில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். மேலும் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தாலும், அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 853 ரேட்டிங் புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார். ஸ்பின்னர்களுக்கு சாதகமான அந்த பிட்சில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா நான்காவது இடத்திற்கு முன்னேறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Chennai Super Kings: 'உனக்கு இனி பந்துவீச்சே கிடையாது...' - பௌலரிடம் கறாராக சொல்லிய தோனி!


பும்ரா மற்றும அஸ்வின் தவிர ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சு தரவரிசையில் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளார்.  ஜடேஜா ஆறாவது இடத்தில் தற்போது உள்ளார்.  இருப்பினும், டெஸ்ட் டெஸ்ட் ஆல் ரவுண்டர் பட்டியலில் ஜடேஜா முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார்.  மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி ஜோ ரூட் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜோ ரூட் ஒரு சிறந்த பெட்டர் என்றாலும், ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.   


மூன்றாவது இடத்தில் ஷாகிப்-அல்-ஹசனை இருக்க, ஐந்தாவது இடத்தில் பென் ஸ்டோக்ஸ் இருக்க, அக்சர் படேல் ஒரு இடம் சரிந்து ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.  ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில், விராட் கோலி ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். டாப் 10 பேட்டர்களில் இடம் பிடித்த ஒரே இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே.  மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வீரர் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடியதால் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார்.


அஸ்வின் செய்ய உள்ள சாதனைகள்


இங்கிலாந்து அணிக்கு எதிராக 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் இதுவரை 93 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை பெற அஸ்வினுக்கு இன்னும் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே தேவை. மேலும் அஸ்வின் இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 496 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்களை வீழ்த்த இன்னும் 4 விக்கெட்கள் மட்டுமே அவருக்கு தேவை.  2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இந்த சாதனையை செய்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க முடியும். 


IND-ENG டெஸ்டில் 100 விக்கெட்டுகள்: இரண்டாவது டெஸ்டில் அஷ்வின் ஏழு விக்கெட்டுகளை எடுக்க முடிந்தால், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் மற்றும் இரண்டாவது பந்துவீச்சாளர் ஆவார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 139 விக்கெட்டுகளுடன் இந்தியா-இங்கிலாந்து டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்.


அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்களை வீழ்த்தினால், இந்திய மண்ணில் அதிக விக்கெட்களை வீழ்த்திய கும்ளேவின் சாதனையை முறியடிக்க முடியும். அஸ்வின் இந்தியாவில் 56 டெஸ்ட் போட்டிகளில் 343 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே போல 2வது டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்சிலும் அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்த முடிந்தால் இந்தியாவிற்காக அதிகமான 5 விக்கெட்களை வீழ்த்திய கும்பிளேவின் மற்றொரு சாதனையை முறியடிக்க முடியும்.  அஸ்வின் 96 டெஸ்ட் போட்டிகளில் 34 முறை ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கும்ப்ளே இந்தியாவுக்காக 35 முறை ஐந்து விக்கெட்டுகளைவீழ்த்தியுள்ளார்.


மேலும் படிக்க | Virat Kohli: விராட் கோலி தாயாருக்கு உடல்நிலை மோசமாக உள்ளதா...? சகோதரர் அளித்த விளக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ