கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு?
ENG vs IND: நவம்பர் 23, 2019 அன்று, கோலி கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்தார். வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிங்க் பால் டெஸ்டில் அவர் 136 ரன்கள் எடுத்தார்.
India vs England 3rd Odi: விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை ஒரு காலத்தில் சதங்கள் அடிப்பது மற்றும் சாதனைகளை முறியடிப்பது என்று இருந்தது. 'ரன் மெஷின்' என்று புகழப்பட்ட முன்னாள் இந்திய கேப்டன், சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் என்ற சர்வதேச சாதனையை சமன் செய்ய சிறந்த வாய்ப்பைப் பெற்றார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக கோலி ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். நவம்பர் 23, 2019 அன்று, கோலி கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்தார். வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிங்க் பால் டெஸ்டில் 136 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு, கோலி மூன்று வடிவங்களிலும் 2537 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார், அதில் 24 முறை அரை சதத்தை அடித்துள்ளார்.
மேலும் படிக்க | ’விராட் கோலிக்கு ஓய்வு தேவையா?’ சரமாரியாக விளாசிய ஆர்பி சிங்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், வெறும் 16 ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம், மொத்தம் 77 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ளார். மான்செஸ்டரில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் கோலி சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு பெருகி உள்ளது. இன்றைய போட்டியில் கோலி சதம் அடிக்க தவறினால் அவர் 1000 நாட்கள் சதம் அடிக்காமல் இருந்தார் என்ற மைல்கல்லை எட்டுவார். இந்திய அணி அடுத்ததாக விளையாட உள்ள மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இருந்து கோலி ஓய்வு பெற்றுள்ளார். ஐந்து டி20கள் மற்றும் மூன்று ODIகள் கொண்ட இந்த சுற்றுப்பயணம் ஜூலை 22 இல் தொடங்கி ஆகஸ்ட் 8 அன்று முடிவடையும். அதன்பிறகு இந்தியா ஆசிய கோப்பை போட்டியை மட்டுமே விளையாட உள்ளது, அதன் அணி மற்றும் தேதிகள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.
கோஹ்லி இந்த மைதானத்தில் முன்பு மூன்று ODI போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 77, 72 மற்றும் 1 ரன்களுடன் மூன்று இன்னிங்ஸ்களிலும் 150 ரன்கள் எடுத்துள்ளார், இவை அனைத்தும் 2019 உலகக் கோப்பை போட்டியின் போது அடித்த ரன்கள் ஆகும். தற்போது கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு ஆசிய கோப்பை வரை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று குடும்பத்துடன் நேரம் செலவிட உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோலிக்கு எதிராக பேசிய நிலையில் கங்குலி மற்றும் ரோஹித் சர்மா ஆதரவாக பேசி இருந்தனர்.
மேலும் படிக்க | மீண்டும் சிஎஸ்கே-வில் சுரேஷ் ரெய்னா? சந்தித்துக்கொண்ட தோனி, ரெய்னா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ