IND vs NZ : பிட்சை விட்டு வெளிய வந்த ஷாட் ஆடிய வாஷிங்டன்... அடுத்து என்ன நடந்தது தெரியுமா?
வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகள் என 36 ரன்களை குவித்து, இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த உதவியாக இருந்தார்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை முடிந்த கையுடன் இந்திய அணி, நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில், முதல் போட்டி மழை காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, இரண்டாவது போட்டியை இந்தியா வென்றது.
தொடர்ந்து, நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி மற்றும் 3ஆவது போட்டி நடைபெற்றது. இதிலும், மழை குறுக்கிட்டதால் டக்-வெர்த் லீவிஸ் முறையில் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. இதனால், 1-0 என்ற கணக்கில் ஹர்திக் தலைமமையிலான இந்திய அணி தொடரை வென்றது.
இதையடுத்து, தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரையும் இந்தியா விளையாட உள்ளது. இதில், ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட உள்ள நிலையில், ஷிகர் தவான் இந்திய ஒருநாள் அணியை வழிநடத்துகிறார்.
மேலும் படிக்க | சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? சோக கதை மூலம் ஷிகர் தவான் விளக்கம்
இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டி, ஆக்லாந்து நகரில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணிக்கு, ஷிகர் தவான் - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில், கில் 50 ரன்களிலும் ஷிகர் தவான் 72 ரன்களிலும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். இம்முறையும் ரிஷப் பண்ட் 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
சூர்யகுமார் யாதவ் 4 ரன்களில் வெளியேறினாலும், ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணி ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம், 50 ஓவர்களில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்களை எடுத்தது.
ஷ்ரேயஸ் ஐயர் 80, சஞ்சு 36 ரன்கள் எடுத்திருந்தனர். குறிப்பாக, 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடித்து வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களை குவித்து அதிரடி காட்டினார். அப்போது, 49ஆவது ஓவரில் ஹென்ரி வீசிய 5ஆவது பந்து ஆஃப் சைட்டில் வைட் லைனில் வீழுந்தது.
அந்த பந்தை அப்படியே பின்பக்கம் அடிக்க முயற்சித்த வாஷிங்டன் சுந்தர் அவருக்கு இடதுபக்கம் நகர்ந்து ஸ்கூப் ஷாட் அடித்தார். அந்த ஷாட்டை அவர் அடித்து முடித்தபோது, ஏறத்தாழ அவர் பிட்சை விட்டு வெளிய வந்துவிட்டார். அது ஒன்-பவுண்ஸ் பவுண்டரியாக மாறியது. இதன் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
307 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ