India vs New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தது. பிறகு இரண்டாவது இன்னிங்சில் 462 ரன்கள் அடித்த போதிலும் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் 2வது போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது. இதனால் அணியில் சில மாற்றங்களை மேற்கொள்ள உள்ளனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், இந்திய அணியின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Rohit Sharma | ரிஷப், சர்பிராஸ் கானுக்கு குட் நியூஸ் கொடுக்க கேப்டன் ரோகித்! ரசிகர்கள் செம ஹேப்பி


குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு டெஸ்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் முகமது சிராஜ். சிராஜ் வெளிநாடுகளில் சிறப்பாக பந்துவீசி இருந்தாலும் இந்தியாவில் சமீபத்தில் சிறப்பாக செயல்படவில்லை. இதுவரை இந்திய மண்ணில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36.15 சராசரியில் 19 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். பெங்களூரு டெஸ்ட் போட்டியில் பும்ராவுடன் இணைந்து ஆகாஷ் தீப் விளையாடி இருந்தால் போட்டியின் முடிவு கூட மாறி இருக்கலாம். ஆனால் சிராஜ் முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இல்லாமல் போனார். இந்நிலையில், முன்னாள் பிசிசிஐ தலைமை தேர்வாளர் சபா கரீம் சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் சிராஜுக்கு பதில் புதிய வீரரை இந்தியா தேட வேண்டிய நேரம் இது என்று தெரிவித்துள்ளார்.



ஆகாஷ் தீப் இந்திய மண்ணில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சபா கரீம் கூறுகையில், "முகமது சிராஜ் ஒருவித அழுத்தத்தில் இருக்கலாம். அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது குறித்து முடிவு செய்வார்கள் என்று நினைக்கிறன். ஏனெனில் ஒரு டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை எடுக்க வேண்டும். புதிய பந்தில் ஆகாஷ் தீப் சிறப்பாக விக்கெட்டுகளை எடுக்கிறார். பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் நன்றாக பந்து வீசி இருந்தார். பழைய பந்திலும் நன்றாக பந்துவீசுகிறார். அவரை ஒப்பிடும் போது சிராஜ் இன்னும் சிறப்பாக பந்துவீச வேண்டும். குறிப்பாக இந்திய மண்ணில் பந்துவீசுவதில் சிராஜ்க்கு நல்ல அனுபவம் உள்ளது, அதனை அவர் சரியாக பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோருடன் பணிபுரிந்த முன்னாள் RCB பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸனும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். "ஆகாஷ் தீப் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவருக்கு விக்கெட் எடுக்கும் திறன் உள்ளது. எனவே சிராஜுக்குப் பதிலாக ஆகாஷ் தீப்பை தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். அவர் மிகவும் வித்தியாசமான பந்துவீச்சாளர்கள் என்று நான் நினைக்கிறேன். ஆகாஷ் தீப்பின் சிறப்பு என்னவென்றால், பேட்ஸ்மேன் நினைப்பதை பந்தை சற்று வேகமாக வீசுவார். தொடர்ந்து ஒரே இடத்தில் பந்தை பிட்ச் செய்யும் திறனையும் வைத்துள்ளார்" என்று ஹெசன் கூறினார்.


மேலும் படிக்க | முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு ரோஹித், கம்பீர் எடுத்த முக்கிய முடிவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ