Ind vs NZ: இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அஜாஸ் படேல் சாதனை
இந்தியாவிற்கு எதிராக விளையாடிய நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் பத்து விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை புரிந்துள்ளார்
மும்பை: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிஸில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. 325 ரன்கள் எடுத்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 150 ரன்கள் எடுத்தார்.
இந்தியாவிற்கு எதிராக விளையாடிய நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் பத்து விக்கெட்டுகளையும் எடுத்து சாதனை புரிந்துள்ளார். உலக அளவில் இந்த சாதனையை படைத்த மூன்றாவது நபர் அஜாஸ் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.
47.5 ஓவர் வீசி 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அஜாஸ் படேல், 119 ரன்களை கொடுத்தார். இந்தியாவை சேர்ந்த நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல், மும்பை வாங்க்டே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், அவர் இந்த சாதனையை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே 1999இல், பாகிஸ்தானுக்கு எதிராக இந்த சாதனையை புரிந்திருந்தார். டெல்லி டெஸ்டில் 29.3 ஓவர்களை வீசி பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் கும்ப்ளே.
இங்கிலாந்தின் ஜிம்லேக்கரும் இந்த பத்து விக்கெட் சாதனையை படைத்தவர். தற்போது, தனது பூர்வீகத்திலேயே, இந்திய அணிக்கு (Team India) எதிராக களம் இறங்கி, அதில் சாதனையையும் படைத்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல்.
முன்னதாக, இந்தியா - நியூசிலாந்து அணிகள் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னங்சில் 345 ரன்கள் குவித்தது. தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்தார் ஷ்ரேயஸ் ஐயர். ஆனால், முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.
Also Read | முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஐசிசி தரவரிசையில் இடம் பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR