புதுடெல்லி: அண்மையில் டி20 உலக்கோப்பை தொடரில் நியூசிலாந்திடம் தோற்றுப்போன இந்தியா, குறுகிய காலத்திலேயே, ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்தை வெற்றி கொண்டது (India vs Newzealand).


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேப்டனாக இருந்த விராட் கோலியும், அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இல்லாமல் இந்திய அணி விளையாடும் முதல் டி-20 போட்டி இது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்தியாவுடனான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுப் போனது. 


இந்திய அணியில் (Team India) சிறப்பாக விளையாடி, 40 பந்துகளை எதிர்கொண்டு, 62 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ், ஆட்டநாயகன் (Man of the Match award) விருதைப் பெற்றார்.



டாஸ் வென்ற இந்திய அணி  (Team India) பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் முதல் பந்திலேயே அவுட்டானார். பின்னர் களமிறங்கிய சாப்மேனும், கப்திலுடன் இணைந்து 110 ரன்கள் சேர்த்தனர். 


நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ராகுல் நிதானமாக விளையாடினார். 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த ராகுல் சாண்ட்னர் பந்தில் அவுட் ஆனார்.



இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் சூர்யகுமார், 40 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 5 ரன்கள் வெங்கடேஷ் ஐயர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.


இறுதியில் இந்திய அணி 19.4 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை வெற்றிக் கொண்டது. இந்தியா -நியூசிலாந்துக்கு இடையிலான  மூன்று போட்டிகள் கொண்டடி-20 போட்டித்தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.


இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள்: ரோஹித் சர்மா (Captain of Team India), ரிஷப் பந்த் , கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட்


நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள்: டிம் சீஃபர்ட், டிம் சவுத்தி , மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், கைல் ஜேமிசன், ட்ரென்ட் போல்ட், இஷ்னேட், ஆடம்.


Also Read | ICC கிரிக்கெட் கமிட்டியின் தலைவராகிறார் சவுரவ் கங்குலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR