திருந்த மாட்டார்கள்! இந்திய அணியை விளாசிய முன்னாள் வீரர்!
India vs Newzeland: நியூசிலாந்து டி20 தொடரில் சஞ்சு சாம்சனை விட ஷ்ரேயாஸ் ஐயரை தேர்வு செய்ததற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இந்தியாவை சாடியுள்ளார்.
சஞ்சு சாம்சன் நியூசிலாந்து டி20ஐ தொடருக்கான இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்தார், ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என இந்தியா வென்றது. மூன்றாவது போட்டி மழை குறுக்கிட்டதால் டையில் முடிந்தது. 161 ரன்களைத் துரத்தும்போது, இந்தியா 9 ஓவர்களில் 75/4 என்ற நிலையில் இருந்தது. அந்த சமயத்தில் மழை குறிக்கிட்டதால் மீண்டும் தொடர முடியவில்லை. DLS முறைப்படி ஆட்டம் டை ஆனது. ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியாவின் நிலைமாற்றக் கட்டத்தை இந்தத் தொடர் துவக்கியது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான டி20 அணியில் பல வீரர்கள் மற்றும் இளைஞர்கள் அங்கம் வகித்தனர்.
மேலும் படிக்க | போர்ச்சுகல் அணியில் இருந்து ரொனால்டோ நீக்கம்!
இந்த அணியில் விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சன் ஆச்சரியப்படும் விதமாக தொடரின் போது ஒரு ஆட்டத்தை கூட பெறவில்லை. மூன்றாவது டி20யில் சாம்சன், உம்ரான் மாலிக், ஷுப்மான் கில் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, இந்தியா ஏற்கனவே 1-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில், 3வது போட்டியில் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக ஹர்ஷல் படேல் மட்டுமே மாற்றப்பட்டார். ஷ்ரேயாஸ் ஐயர் இரண்டு போட்டிகளிலும் விளையாடினார் (முதல் டி20 டாஸ் இன்றி கைவிடப்பட்டது). ஆனால் அவர் இரண்டு போட்டிகளில் 13 மற்றும் முதல் பந்தில் ஒரு டக் ரன் மட்டுமே எடுத்தார். டி20 கிரிக்கெட் குறித்த அணி நிர்வாகத்தின் அணுகுமுறையை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தொட்டா கணேஷ் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
"சாம்சனை விட ஐயரை முன்னிறுத்துவதன் மூலம், இந்திய தேர்வுக்குழு குழு அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும், டி20 நோக்கிய அணுகுமுறையை அவர்கள் ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது" என்று கணேஷ் ட்வீட் செய்துள்ளார். போட்டிக்கு பின்பு, சாம்சனுக்கும் மற்றவர்களுக்கும் ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை கேப்டன் பாண்டியா விளக்கினார். "சஞ்சு சாம்சனை நாங்கள் அணியில் எடுக்க விரும்பினோம், ஆனால் சில காரணங்களால் எங்களால் முடியவில்லை. அணியில் வீரர்கள் ஆரோக்கியமான சூழலை உருவாக்க, என்னிடம் வந்து பேசலாம் அல்லது பயிற்சியாளரிடம் சென்று பேசலாம். பயிற்சியாளரும் நானும் நாங்கள் சரியான அணியை தேர்வு செய்வோம்" என்று பாண்டியா கூறினார்.
மேலும் படிக்க | இந்த சாதனைகள் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை: ஜெகதீசனை நீக்கிய சிஎஸ்கே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ