India vs New Zealand 2nd T20: ராஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து இந்தியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் நியூசிலாந்து 1-0 என முன்னிலை  பெற்றுள்ளது. இந்நிலையில், இன்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரண்டாவது டி20 ஆட்டத்தில் நியூசிலாந்துடன் இந்தியா மோதுகிறது.  டெவோன் கான்வே மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரின் அரைசதங்களால் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 176 ரன்களை குவித்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுக்கத் தவறினர். ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையேயான 68 ரன்கள் நான்காவது விக்கெட் பார்ட்னர்ஷிப், வாஷிங்டன் சுந்தரின் விரைவான அரைசதம் இந்தியாவிற்கு கைகுடுக்கவில்லை.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



மேலும் படிக்க | Sania Mirza-Shoaib Malik: கண் கலங்கிய சானியா மிர்சா... ஆறுதல் கூறிய சோயப் மாலிக்!


தோல்வியைக் கருத்தில் கொண்டு, இந்திய அணி விளையாடும் XIல் சில மாற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ளது.  நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்த பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் கடைசி ஓவரில் நோ பால் வீசி பலரையும் டென்ஷன் செய்த அர்தீப் சிங் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த போட்டியில் அவர் கடைசி ஓவரில் கொடுத்த ரன்கள் தோல்விக்கு வழி வகுத்தது.  தொடரை சமன் செய்ய வேண்டுமானால், இந்த ஆட்டத்தில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.  



மறுபுறம், நியூசிலாந்து தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்ல தயாராக உள்ளது.  மைதானத்தில் வெப்பநிலை 14-18 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மேக மூட்டம் சுமார் 10 சதவீதமாக இருக்கும், அதே சமயம் ஈரப்பதம் 70 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  லக்னோவில் காற்றின் தரம் நன்றாக இல்லை, எனவே இரண்டாவது டி20 போட்டியின் போது வீரர்கள் சிக்கலை சந்திக்க நேரிடும்.


மேலும் படிக்க | ரோகித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான T20-ல் விளையாடதது ஏன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ