Sania Mirza-Shoaib Malik: கண் கலங்கிய சானியா மிர்சா... ஆறுதல் கூறிய சோயப் மாலிக்!

Shoaib Malik Tweet: சோயப் மாலிக் - சானியா மிர்சா ஜோடி பரஸ்பரம் விவாகரத்து செய்ததாக  கூறப்பட்ட நிலையில், சானியா தன்னைப் பற்றி எதுவும் குறிப்பிடாத போதிலும், சோயப் மாலிக் தனது மனைவிக்காக ஒரு ட்வீட் செய்துள்ளார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 28, 2023, 03:45 PM IST
  • சானியா மிர்சா கண்ணீருடன் சர்வதேச டென்னிஸ் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்தார்.
  • விளையாட்டு வீராங்கனையாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் நீங்கள் ஒரு நம்பிக்கை.
  • சானியா தனது வாழ்க்கையில் ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
Sania Mirza-Shoaib Malik: கண் கலங்கிய சானியா மிர்சா... ஆறுதல் கூறிய சோயப் மாலிக்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர கலப்பு இரட்டையர் ஜோடிகளான சானியா மிர்சா - ரோகன் போபண்ணா இணை  கலப்பு இரட்டையர் அதிர்ச்சி தோல்வி கண்டது.  கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பதால் வெற்றி பெற வேண்டும் என்ற கனவில் இருந்த சானியா மிர்சாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், கண்ணீருடன் சர்வதேச டென்னிஸ் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்தார். அவருக்கு அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி, வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் டென்னிஸ் ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.  அவரது உரையின் போது, அவர் தனது கணவர் சோயப் மாலிக்கைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்பது சுவாரஸ்யமான விஷயம். இதன் போது சானியா,  ‘தனது கிராண்ட்ஸ்லாம் கேரியரை முடிவுக்கு கொண்டுவர இதைவிட சிறந்த இடம் எதுவும் இருக்க முடியாது. என் மகனுக்கு முன்னால் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாடுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. அதனால எனக்கு அது மிகவும் ஸ்பெஷல்’ என குறிப்பிட்டார்.

சோயப் மாலிக் - சானியா மிர்சா ஜோடி பரஸ்பரம் விவாகரத்து செய்ததாக  கூறப்பட்ட நிலையில், சானியா மிர்சா  தன்னைப் பற்றி எதுவும் குறிப்பிடாத போதிலும், சோயப் மாலிக் தனது மனைவிக்காக ஒரு ட்வீட் செய்துள்ளார். ஷோயப் மாலிக் ட்விட்டரில்,  ‘விளையாட்டு வீராங்கனையாக இருக்கு ம் ஒவ்வொரு பெண்ணுக்கும் நீங்கள் ஒரு நம்பிக்கை. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதித்த எல்லாவற்றிற்கும் உங்களைப் பற்றி பெருமைப்படுகிறேன். நீங்கள் பலருக்கு உத்வேகமாக இருக்கிறீர்கள். எப்போதும் இப்படியே உறுதியாக இருங்கள். அருமையான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | IND vs NZ: பார்மில் கில்... பாவம் பிருத்வி ஷா - ஹர்திக் பாண்டியா கூறுவது என்ன?

இதுகுறித்து சானியா கூறுகையில், '2005ல் 18 வயதில் செரீனா வில்லியம்ஸுக்கு எதிராக விளையாடினேன். நான் மீண்டும் மீண்டும் இங்கு வந்து சில போட்டிகளில் வெற்றிபெறும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.' அவரது மகன் இஷான் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் வருகை இந்த நிகழ்வை சிறப்புறச் செய்தது. சானியா மிர்சா மேலும் கூறுகையில்,  ‘எனது அழுகை... அது ஆனந்தக் கண்ணீர். எனக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. எனது தொழில் வாழ்க்கை மெல்போர்னில் தொடங்கியது’ என்றார்.

சானியா தனது வாழ்க்கையில் ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதில் மூன்று பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர்களில் பல பட்டங்கள் ஆகியவை அடங்கும். 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் 2012 ஆம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் கலப்பு இரட்டையர் பட்டங்களை வென்ற சானியா, மகேஷ் பூபதியுடன்  விளையாடினார்.

மேலும் படிக்க | இந்திய அணியுடன் தோனி... சொந்த ஊரில் சர்ப்ரைஸ் கொடுத்த 'தல'

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News