ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மோதல் லேட்டஸ் அப்டேட்
India vs Pakistan match: இந்திய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதும் போட்டி நாளை, அதாவது செப்டம்பர் 2 ஆம் தேதி, இலங்கையில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளை இலங்கையில் போட்டி நடைபெறுமா?
புதுடெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2023 போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மோதலைத் தவிரவும், பிற போட்டிகளையும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு ரசிக்கலாம். இந்தியா vs பாகிஸ்தான் மற்றும் பிற ஆசியக் கோப்பை 2023 போட்டிகளை ஆன்லைனில் இலவசமாகப் பார்ப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள். அனைத்து ஆசிய கோப்பை போட்டிகளையும் மொபைல் போன்களில் இலவசமாக பார்க்கலாம்.
ஆசிய கோப்பை 2023 போட்டித்தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்துகிறது. 19 நாட்கள் நீடிக்கும் இந்த இந்த போட்டித்தொடரின் இறுதிப் போட்டி செப்டம்பர் 17 அன்று நடைபெறும்.
இந்தியா Vs பாகிஸ்தான் என்பது ஒரு போட்டி மட்டுமல்ல, இரு நாட்டு கிரிக்கெட் பிரியர்களுக்கும் உணர்வுப்பூர்வமான தருணம் என்றே சொல்லலாம். இந்திய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதும் போட்டி நாளை, அதாவது செப்டம்பர் 2 ஆம் தேதி, இலங்கையில் தொடங்குகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆட்டத்தை மீண்டும் காண ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் படிக்க | இந்தியா இதை செய்யாவிட்டால் பாகிஸ்தான் வெற்றி உறுதி - டிப்ஸ் கொடுத்த சல்மான் பட்
இந்தியா Vs பாகிஸ்தான் என்ற பெரிய ட்ரெண்டிற்கு மத்தியில், ஜவான் நட்சத்திரம் ஷாருக்கானின் பழைய பேட்டி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் பாகிஸ்தான் வீரர்கள் சிறந்த T20 வீரர்கள் என்று அவர் கூறியது வைரலாகும் நேரத்தில், அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதுபோல காட்ட முயற்சிக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
KKR (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) இன் உரிமையாளரான ஷாருக்கான், பாகிஸ்தான் வீரர்கள் உலகின் சிறந்த T20 வீரர்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் சாம்பியன்கள், அவர்கள் அற்புதமானவர்கள், ஆனால் எங்கோ ஒரு சிக்கல் உள்ளது, அதை நாம் மறுக்க முடியாது என்று கூறியிருந்தார்.
இந்தியா vs பாகிஸ்தான் 2023 எதிர்வரவிருக்கும் போட்டிகள்
ஆசியக் கோப்பை மற்றும் ஐசிசி உலகக் கோப்பை 2023 ஆகிய 2 போட்டிகளில் பாகிஸ்தானும் இந்தியாவும் நேருக்கு நேர் மோதுகின்றன. கிரிக்கெட் போட்டிகளில் ரன் மற்றும் விக்கெட்டுகள் அடிப்படை என்றால், பாகிஸ்தான் இந்தியா மோதும் போட்டிகளில், தேசப்பற்று என்ற விஷயம் அடிநாதமாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு கிரிக்கெட் அட்டவணையின் மகுடம் என்பதில் சந்தேகமில்லை. 2023ல் நடக்கவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.
மேலும் படிக்க | ஆசிய கோப்பையில் அதிக வெற்றிகளை குவித்த 7 கேப்டன்கள்... யார் யார்னு பாருங்க?
கடந்த முறை நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டித்தொடர் 20 ஓவர் போட்டியாக நடைபெற்ற நிலையில், இந்த முறை ஒருநாள் போட்டியாக மாற்றப்பட்டுவிட்டது. முதல் போட்டியில் ஆசிய கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியும், முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தேர்வான நேபாளம் அணியும் களம் கண்ட போட்டியில் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இலங்கை சென்றடைந்துள்ளது. இந்திய அணி இந்த ஆண்டு ஆசியப்போட்டிகளில் எதிர்கொள்ளும் முதல் அணி பாகிஸ்தான் அணி என்பது முக்கியமான ஒன்று.
இலங்கையின் பல்லகல்லே மைதானத்தில் நாளை நடைபெற உள்ள போட்டியில், நீண்ட நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் இந்தியா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மோத இருப்பதால் கிரிக்கெட் உலகமே இப்போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பல்லக்கல்லே மைதானம் அமைந்திருக்கும் பகுதியில் 90% மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியிருப்பதால் ரசிகர்கள் இந்த போட்டியை காண முடியாதோ என்றும் கவலைப்படத் தொடங்கிவிட்டனர்.
மேலும் படிக்க | ஆசிய கோப்பை 2023: நேரலை மற்றும் இலவசமாக எந்த ஓடிடி, தொலைக்காட்சியில் பார்க்கலாம்?
மேலும் படிக்க | ஆசியக்கோப்பை முதல் போட்டி! சொந்த மண்ணில் நேபாளத்தை தட்டித்தூக்கிய பாகிஸ்தான் வெற்றி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ