மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களை விளையாட தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெறுகிறது. முதல் போட்டி, லக்னோவில் உள்ள பாரத் ரத்னா அடல் பிகாரி வாஜ்பாஜ் எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. லக்னோவில் தொடர் மழை பெய்து வந்த காரணத்தால், போட்டி இரண்டு மணிநேரம் தாமதமாக தொடங்கியது. 


மேலும் படிக்க | ஒரே இடத்தில் 2 கிரிக்கெட் ஜாம்பவான்கள்... ஆனால் வேறு களம் - வைராலகும் புகைப்படங்கள்


டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய தென்னாப்பிரிக்க ஓப்பனர்கள் மலன் - டி காக் ஆகியோர் சுமாரான தொடக்கத்தை அளித்தனர். அந்த ஜோடி 49 ரன்களை எடுத்திருந்தபோது, ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் மாலன் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.


அடுத்த வந்த கேப்டன் பவுமா 8 ரன்களிலும், மார்க்ரம் ரன் ஏதும் இன்றியும் அடுத்தடுத்து முறையே தாக்கூர், குல்தீப் யாதவ் ஆகியோரிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினர். கிளாசென் உடன் ஜோடி சேர்ந்த டி காக், அரைசதத்தை  நெருங்கும் வேளையில் ரவி பீஷ்னோய் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 54 பந்துகளில் 48 ரன்களை எடுத்திருந்தார். 


இதன்பின்னர், ஜோடி சேர்ந்த கிளாசென் - டேவிட் மில்லர் ஆகியோர் நிதானமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.  23ஆவது ஓவரில் ஜோடி சேர்ந்த ஜோடி கடைசி ஓவர் வரை ஆட்டமிழக்காமல் இருந்தது. பவுண்டரி மழை பொழிந்த நிலையில், இருவரும் அரைசதம் கடந்து மிரட்டினர்.


இந்த ஜோடி மொத்தம் 139 ரன்களை குவித்ததன் மூலம், தென்னாப்பிரிக்கா அணி 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 249 ரன்களை குவித்தது. மில்லர் 75 ரன்களுடனும் (5 பவுண்டரி, 3 சிக்ஸர்), கிளாசென் 74 ரன்களுடனும்  (6 பவுண்டரி, 2 சிக்ஸர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 


இந்திய பந்துவீச்சு சார்பிஸ் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். மேலும், 22 ரன்கள் எக்ஸ்ட்ராக்களாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 15 வருட ஏக்கத்தை போக்க... கனவுகளுடன் ஆஸ்திரேலியா பறந்த இந்திய அணி; கோட்சூட் கிளிக்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ