மழை பொய்த்தது - இந்தியா முதலில் பேட்டிங்; மிரட்ட காத்திருக்கும் தென்னாப்பிரிக்க வேகங்கள்!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களை விளையாட தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், முதல் டி20 போட்டி கடந்த செப். 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இரண்டாவது டி20, கௌகாத்தியில் பர்சபரா மைதானத்தில் இன்று நடக்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஷம்ஸிக்கு பதிலாக லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதன்மூலம், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் நாளை மறுநாள் (அக். 4) நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | ஐயோ...! மயிரிழையில் உயிர் பிழைத்த முன்னாள் இந்திய வீரர் - போட்டியின்போது காயம்
டி20 தொடரை அடுத்து, இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் மோத உள்ளன. இப்போட்டிகள் அக். 6. 9, 11ஆம் தேதிகளில் முறையே லக்னோ, ராஞ்சி, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. அந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், ஷ்ரேயஸ் ஐயர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங்
தென்னாப்பிரிக்கா: குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா(கேப்டன்), ரிலீ ரோசோவ், மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்க்கியா, லுங்கி இங்கிடி
மேலும் படிக்க | T20 World Cup: பும்ரா விலகல்-னு யாரு சொன்னா? டிராவிட் கொடுத்த மெகா அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ