ஐயோ...! மயிரிழையில் உயிர் பிழைத்த முன்னாள் இந்திய வீரர் - போட்டியின்போது காயம்

கிரிக்கெட் வீரர் உன்முக் சந்த், போட்டியின் போது, தனக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 1, 2022, 09:16 PM IST
  • உன்முக் சந்த் இந்திய U-19 அணியின் கேப்டனாக இருந்தார்.
  • இவர் தலைமையில் இந்திய அணி 2012ஆம் ஆண்டு U-19 உலகக்கோப்பையை வென்றது.
  • இவர் கடந்தாண்டு இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஐயோ...! மயிரிழையில் உயிர் பிழைத்த முன்னாள் இந்திய வீரர் - போட்டியின்போது காயம் title=

இந்திய அணியில் இருந்து ஓய்வுபெற்று, அமெரிக்காவில் தற்போது கிரிக்கெட் விளையாடி வருபவர் உன்முக் சந்த். இவர் இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் தனது இடது கண் வீங்கியுள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவரின் இடது கண் திறக்க முடியாத அளவு வீங்கியிருந்தது. தற்போது, அவர் அமெரிக்காவில் நடைபெறும் மைனர் லீக் கிரிக்கெட் தொடரில் சிலிக்கான் வேலி ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

டெல்லியைச் சேர்ந்த உன்முக் சந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,"ஒரு விளையாட்டு வீரருக்கு எப்போதும், எதுவும் எளிதானதாக இருக்காது. சில நாட்களில் நீங்கள் வெற்றியுடன் வீட்டிற்கு வருவீர்கள். மற்ற நாட்களில் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு வருவீர்கள்.சில நாட்களில் காயங்களுடன் மற்றும் கையில் பற்களுடனும் கூட வீட்டிற்கு வரலாம்.

மேலும் படிக்க |T20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா பும்ரா? மவுனம் காக்கும் பிசிசிஐ - பின்னணி இதுதான்

பெரிய ஆபத்தில் இருந்து தப்பியதற்கு கடவுளுக்கு நன்றி. கடினமாக விளையாடுங்கள் ஆனால் பாதுகாப்பாக இருங்கள். அது ஒரு மெல்லிய கோடு" என பதிவிட்டுள்ளார்.  உன்முக் சந்த் கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஜனவரி 2022இல், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் விளையாடினார். அந்த தொடரில் விளையாடிய முதல் இந்திய அவர்தான். அவர் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடினார்.

உன்முக் சந்த் 2012இல் நடைபெற்ற, U-19 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். அந்த உலகக்கோப்பை இந்திய அணி வென்றது. அந்த தொடரின் இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிக்காட்டினார். ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக மொத்தம் 21 போட்டிகளில் விளையாடி 300 ரன்களை எடுத்துள்ளார்.  

மேலும் படிக்க | பெர்பார்மன்ஸ் சரி இல்லை! இந்த 3 வீரர்களை நீக்க பிசிசிஐ திட்டம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News