15:01 13-10-2019
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் விராட் தலைமையிலான அணி கைப்பற்றியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 



13:23 13-10-2019
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றியை அடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றியை நோக்கி இந்திய அணி. இன்னும் மூன்று விக்கெட்டை கைப்பற்றினால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விராட் தலைமையிலான அணி வெல்லும்.


 




12:14 13-10-2019
28.2 ஓவரில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஐந்தாவது விக்கெட்டை இழந்தது தென்னாப்பிரிக்கா அணி. இந்த அணியின் விக்கெட் கீப்பர் க்வின்டன் டி காக் 5(9) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார்.


 




11:42 13-10-2019
இரண்டாவது இன்னிங்சை ஆடி வரும் தென்னாப்பிரிக்கா அணி 27 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது உணவு இடைவேளை என்பதால், இன்னும் சற்று நேரம் கழித்து ஆட்டம் ஆரம்பமாகவும்.


 




11:22 13-10-2019
25.2 ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி தனது நான்காவது விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் 48(72) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டையும் அஸ்வின் கைப்பற்றினார்.


 




11:12 13-10-2019
23.3 ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி தனது மூன்றாவது விக்கெட்டை இழந்தது. அந்த அணியின் கேப்டன் டு பிளெசிஸ் 5(54) ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த விக்கெட்டை இந்திய வீரர் அஸ்வின் கைப்பற்றினார்.



புதுடெல்லி: புனேவில் நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், 4 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்த தென்னாப்பிரிக்கா அணி, பாலோ-ஆன் செய்யப்பட்டதால், இன்று தனது இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது. இதில் இரண்டு விக்கெட்டை இழந்துள்ளது. 


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பூனே மைதானத்தில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது.


இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. மயங்க் அகர்வால் (108) ரன்களும், அணித்தலைவர் விராட் கோலியின் 254 ரன்கள் உதவியுடன் இந்திய 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ககிசோ ரபாடா அபாரமாக பந்து வீசி இந்திய அணியின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 15 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்கள் மட்டுமே குவித்தது. மூன்றாவது நாளாக தொடர்ந்து அடிய தென்னாப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 72 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதற்கு அடுத்த படியாக அணியின் கேப்டன் டு பிளெசிஸ் 64(117) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 


இதன்மூலம் இந்திய அணி 326 ரன்கள் முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்கா அணிக்கு பாலோ-ஆன் தரப்பட்டதால், இன்று தனது இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது.