இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி தோற்றது. இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சுரியனில் நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 335 ரன் குவித்தது. அந்த அணியின் மார்க்ரம் 94 ரன்களும் ஹாசிம் அம்லா 82 ரன்களும் கேப்டன் டுபிளிசிஸ் 61 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.


அடுத்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் விஜய் 46 ரன் எடுத்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும் கேப்டன் விராத் கோலி பொறுப்பாக ஆடி அணியை பெரும் சரிவிலிருந்து மீட்டார். 


இன்று 2-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்திருந்தது. கோலி 130 பந்துகளில் 85 ரன்களுடனும் ஹர்திக் பாண்டியா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக விளையாடிய கேப்டன் விராத் கோலி சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவருக்கு 21-வது டெஸ்ட் சதமாகும். பொறுமையாக விளையாடி வந்த ஹர்திக் பாண்ட்யா, ரன் அவுட் ஆனார். 2 மணியளவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்துள்ளது. விராத் கோலியும் அஸ்வினும் ஆடி வருகின்றனர்.