தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரை தோல்வியுடன் இந்திய அணி நிறைவு செய்திருந்தாலும், முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஸ்ரேயாஸ் அய்யர், முகமது சிராஜ் உள்ளிட்டோர் அணியில் சேர்க்கபட்டனர். பிளேயிங் லெவனில் மட்டும் மாற்றமில்லை. பேட்டிங் ஆர்டரிலும் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கேப்டன் ரோகித் சர்மாவுடன் ரிஷப் பன்ட் பேட்டிங் ஆடினார். 4வது இடத்தில் ஆடிக் கொண்டிருந்த சூர்ய குமார் யாதவ் 5வது பேட்டிங் ஆர்டரிலும், தினேஷ் கார்த்திக் 4வது இடத்திலும் மாற்றி களமிறக்கப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | INDvsSA: இவர்களுக்கு தெளிவு தேவை.. தோல்விக்கு பிறகு கடுப்பாக பேசிய ரோகித்


இப்படி பல மாற்றங்கள் செய்தபோதும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. அதேநேரத்தில் இந்திய அணிக்கு சில பாசிட்டிவான அணுகுமுறைகள் கிடைத்தன. அதாவது ஓப்பனிங் இறங்கிய பன்ட் அதிரடியாக விளையாட, பின்வரிசையில் இருந்து மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்ட தினேஷ் கார்த்திக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவருக்கு நேற்று சூப்பராக ஆட்டம் ஒட்டியபோதும், தேவையில்லாத ஷாட் ஆடி அவுட்டானார். அப்போது பெவிலியனில் இருந்த ரோகித் சர்மா, படு அப்செட்டானார்.



மேட்ச் நன்றாக சென்று கொண்டிருக்கும்போது எதற்கு இந்த தேவையில்லாத ஷாட் என தினேஷ் கார்த்திக்கை கடிந்தும் கொண்டார். அந்த நேரத்தில் கோபத்தில் இருந்த ரோகித் சர்மா, மேட்ச் முடிந்த பிறகு தினேஷ் கார்த்திகை அழைத்து ஜாலியாக உரையாடினார். அப்போது, பந்து மிடில் ஸ்டம்பில் விழுந்து ஸ்விங் ஆகிறது அதனை கவனிக்காமல் ரிவர்ஸ் பேட் எதற்கு போட்டீர்கள் என ஜாலியாகவும், கிண்டலாகவும் தினேஷ் கார்த்திக்கிடம் கூற, அதற்கு அவர் ஒரு பதிலை கூறி குலுங்கி குலுங்கி சிரிக்கிறார். இருவரும் உரையாடும் இந்த ஜாலியான வீடியோவை அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க | திரும்ப திரும்ப கேட்ட பந்த்! கண்டுகொள்ளாத ரோஹித்! கடுப்பான பந்த்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ