உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி நடைபெறும் பிட்ச் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்பதால் முதலில் பேட்டிங் விளையாடும் அணிக்கு சாதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. அதன்படி டாஸ் வெற்றி பெறும் பேட்டிங் எடுக்கலாம் என்றும், 300 ரன்களுக்கும் மேல் அடிக்க முடியாது என்றும் கணிக்கப்பட்டது. இப்படியான சூழலில் டாஸ் இந்திய அணிக்கு சாதமாக விழுந்திருக்கிறது. டாஸ் வெற்றி பெற்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதுவே இந்திய அணிக்கு இப்போது இப்போட்டியில் சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உலக்கோப்பை: இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டியில் வெற்றி பெறப்போவது யார்?


கேபட்ன் ரோகித் சர்மா இது குறித்து பேசும்போது, பேட்டிங் செய்கிறோம். எங்களின் திறமையின் அடிப்படையில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என கூறினார். அவருக்குப் பிறகு பேசிய தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா, நாங்களும் பேட்டிங் செய்ய விரும்பினோம். ஆனால் டாஸ் எங்கள் கையில் இல்லை, இருப்பினும் இது ஒரு நல்ல சவால். அணியாக எங்களுக்கு எங்கு பிரச்சனை இருக்கிறது என தெரியும். அதனை இப்போட்டியில் சரி செய்ய நல்ல வாய்ப்பு என நம்பிக்கையுடன் கூறினார். 


நேற்று, கொல்கத்தாவின் தாதா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும் மைதானத்துக்கு வந்து பிட்சை பார்த்துவிட்டு சென்றுள்ளார். அப்போது மைதான பராமரிப்பாளருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த அவர், தென்னாப்பிரிக்கா அணியின் சப்போர்ட் பயிற்சி குழுவிடன் பேசிவிட்டு சென்றுள்ளார். இந்திய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரை அவர் சந்திக்கவில்லை. இருப்பினும் மைதானம் குறித்த தன்னுடைய அனுமானத்தை இந்நேரம் இந்திய அணிக்கு தெரிவித்திருப்பார் என நம்பப்படுகிறது. 


சனிக்கிழமை மாலை இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், மைதான பராமரிப்பாளரிடம் பேசி மைதானம் குறித்த தகவல்களை கேட்டுக் கொண்டார். பின்னர் பேசிய அவர், மைதானம் குறித்து பெரிதாக நாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை, எப்படியான டிராக்காக இருந்தாலும் நாங்கள் விளையாட தயாராகவே இருக்கிறோம். மழைக் குறுக்கீடு, பனிப்பொழிவு ஆகியவற்றுக்கு முன்னால் உங்களால் எதுவும் செய்ய முடியாது. இவறுக்காக நாங்கள் பிளேயிங் லெவனில் மாற்றம் ஏதும் செய்ய மாட்டோம். உலக கோப்பை தொடரின் கடந்த போட்டிகளில் விளையாடிய அணியே இந்த போட்டியில் களமிறங்கும் என டிராவிட் தெரிவித்தார்.


மேலும் படிக்க | இந்த வீக்னஸூ இருந்தும் இந்தியா இலங்கையை ஜெயித்தது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ