2_வது ஒருநாள் போட்டி : 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2-வது சர்வதேச ஒருநாள் போட்டி பல்லெகலே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் நீரோஷ் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக தொடக்க வீரர்களாக காலம் இறங்கினார்கள். இலங்கை அணி 41 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட் விழுந்தது. நீரோஷ் டிக்வெல்ல 31(24) ரன்கள் எடுத்து ஜாஸ்ரிட் பும்ரா பந்தில் அவுட் ஆனார். 15.6 ஓவரில் இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிலிண்டா ஸ்ரீவர்தான 58 ரன்கள் எடுத்தார்.
இலங்கை அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்து உள்ளது.
இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும், சஹால் 2 விக்கெட்டும், பாண்டியா மற்றும் ஆக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இந்தியா வெற்றி பெற 237 ரன்கள் தேவை. இன்னும் சற்று நேரத்தில் இந்தியா தனது பேட்டிங்கை தொடங்க உள்ளது.
இந்திய அணி பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால், இதனால் டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி 47 ஓவர்களில் 231 ரன்கள் இந்திய அணிக்கு இலக்கு தரப்பட்டது. தனது பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணி 15 ஓவரில் 10௦ ரன்களை கடந்தது. ரோகித் சர்மா (54) மற்றும் ஷிகர் தவானும்(49) அடுத்தடுத்து ஓவரில் அவுட் ஆனார்கள்.
இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் அபார பந்து வீச்சால் 6 விக்கெட் வீழ்த்தினார். 22 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து தடுமாறியது.
இந்திய அணி 131 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் எம்எஸ் தோனி மற்றும் புவனேஷ்வர்குமாரும் இணைந்து கடைசி வரை களத்தில் நின்று ஆடியதால் இந்திய அணி 44.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக அரைசதம் அடித்தார் புவனேஷ்வர் குமார். புவனேஷ்வர்குமார் 53 ரன்களும் எம்எஸ் தோனி 45 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றி மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.