IND vs SL, 2nd ODI: இலங்கையை வெற்றிகொள்ளுமா இந்தியா? இலக்கு 276
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஒன்பது விக்கெட் இழப்பிறகு 275 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப்போட்டியில் வெற்றி பெற இந்திய அணி 276 ரன்கள் எடுக்கவேண்டும்.
India Tour of Sri Lanka: இலங்கை சென்றுள்ள ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி, இன்று அந்நாட்டுக்கு எதிரான இரண்டாது ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஒன்பது விக்கெட் இழப்பிறகு 275 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப்போட்டியில் வெற்றி பெற இந்திய அணி 276 ரன்கள் எடுக்கவேண்டும். இன்னும் சற்று நேரத்தில் இந்திய வீரர்கள் களத்தில் இறங்கவுள்ளனர்.
முதலாவது ஒருநாள் போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை தன்வசப்படுத்தும்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்கள் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் மினோட் பானுகா இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். மினோட் பானுகா 36(42) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதற்கு அடுத்தட வந்த பானுகா ராஜபக்ஷ டக்-அவுட் ஆனார்.
இலங்கை அணியை பொறுத்த வரை, இன்றைய ஆட்டத்தில் அந்நாட்டு வீரர்கள் நிதானமாக ஆடினார்கள். தொடக்க வீரர்கள் அவிஷ்கா பெர்னாண்டோ அரைசதம் அடித்து அவுட் ஆனார். அவர் 71 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதபோல அந்த அணியில் அதிகபட்சமாக சரித் அசலங்கா (Charith Asalanka) 65(68) ரன்கள் அடித்தார். இறுதியாக 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிறகு 275 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் (Bhuvneshwar Kumar) மற்றும் யுஸ்வேந்திர சாஹல் (Yuzvendra Chahal) தலா மூன்று விக்கெட்களை எடுத்தனர். தீபக் சாஹர் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். இந்திய அணி சார்பில் ஒரு ரன்-அவுட்டும் செய்யப்பட்டது.
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தொடரை கைப்பற்றும். ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றி சாதனை செய்யவுள்ளது. ஒருவேளை இந்திய அணி தோல்வியை தழுவும் பட்சத்தில், தொடர் 1-1 என சமநிலையில் இருக்கும். கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR