இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையடி வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.


முன்னதாக, கொல்கத்தாவில் நடைப்பெற்ற முதலாவது டெஸ்ட் மழை காரணமாக "ட்ரா" ஆனது. நாக்பூரில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 


இந்நிலையில் இன்று 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையடி வருகிறது.


ஆரம்பத்தில் நிதானமான விளையாட்டை வெளிப்படுத்திய போதிலும், இந்தியாவிற்கு ஆரம்ப அடியாய், துவக்க ஆட்டகாரர் தவான் 23(35) ரன்களில் வெளியேறினார். அவரின் பின்னால் புஜாராவும் 23(39) ரன்களுக்கு வெளியேறினார்.


எனினும் சற்று சுதாரித்துக் கொண்ட இந்தியா சற்று நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது!


முரளி விஜய் உடன் கைகோர்த்த கேப்டன் கோலி, ஆக்ரோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்த இந்திய அணியின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது. விஜய் மற்றும் கோலி என இருவரும் அடுத்ததடுத்து தங்களது அரை சதத்தினை பூர்த்தி செய்தது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது.


அதேப் போல் தங்களது சதத்தினையும் அடுத்தடுத்து பூர்த்தி செய்தனர். கோலி தனது சதத்தினை பூர்த்திசெய்வாரா இல்லையா என பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


பின்னர் தனது 155(267) ரன்னில் முரளி விஜய் ஆட்டமிழக்க, பின்னர் களமிரங்கிய ரஹானே 1(5) ரன்களில் வெளியேறினார். எனினும் வீரட் கோலி தனது 8-வது 150-னுடன் களத்தில் நின்றார். 



தற்போதைய நிலவரப்படி இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களுக்க 4 விக்கெட் இழந்து 371 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 156(186) மற்றும் ரோகித் சர்மா 6(14) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.