IND vs SL 3வது ஒருநாள்: தொடரை கைபற்றுமா இந்தியா!
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டனத்தில் மதியம் 1:30 மணிக்கு நடக்கிறது.
இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டனத்தில் நடக்கிறது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டிகள் முடிவில், தொடர் 1-1 என, சம நிலையில் உள்ளது. தர்மசாலா ஆடுகளத்தில் பேட்டிங் தள்ளாடிய இந்திய அணி வீரர்கள், மொகாலியில் வெளுத்து வாங்கி வென்றனர்.
இந்நிலையில் இன்று கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டனத்தில் மதியம் 1:30 மணிக்கு நடக்கிறது. தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இன்றைய போட்டி இருக்கும்.