India vs Sri Lanka 2nd ODI: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது. முகமது சிராஜ் (3/30), குல்தீப் யாதவ் (3/51) ஆகியோர் இந்தியாவின் வெற்றியை அமைத்துக் கொடுத்தனர், அதைத் தொடர்ந்து கேஎல் ராகுல் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  இந்த வெற்றியின் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த சாதனையை இந்தியா வசப்படுத்தியது. ஒருநாள் போட்டிகளில் 436 தோல்விகளை சந்தித்த இந்தியாவின் சாதனையை முறியடித்து இலங்கை தனது 437வது தோல்வியை சந்தித்தது.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரஷித் கான் செய்த அதிரடி! திகைத்து போன ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்!


இலங்கை அணி 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆட்டமிழக்க, குல்தீப் மற்றும் சிராஜ் பவுலிங்கில் மிரட்டினர். இந்தியா பேட்டிங்கில் 15-வது ஓவரில் 86/4 என்று தடுமாறிய போது, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (36), அக்சர் படேல் (21) ஆகியோருடன் இரண்டு முக்கியமான பார்ட்னர்ஷிப்களுடன் அணியை ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றினார், இந்தியா 43.2 ஓவர்களில் இலக்கை எட்டியது.  ஒரு நாள் போட்டிகளில் எதிரணிக்கு எதிராக அதிக தோல்விகளை சந்தித்த நியூசிலாந்தின் சாதனையையும் இலங்கை சமன் செய்துள்ளது. இது இந்தியாவுக்கு எதிராக இலங்கையின் 95 வது தோல்வியாகும், நியூசிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 95 தோல்விகளை சந்தித்துள்ளது.


 



டி20-ல் ஒரு அணிக்கு எதிரான அதிக தோல்விகளில் இலங்கை மீண்டும் முதலிடத்தில் உள்ளது. அவர்கள் 94 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளனர்.  அதேசமயம் இந்தியாவுக்கு எதிராக அவர்கள் பெற்ற 19 தோல்விகள் ஒரு அணிக்கு எதிரான அதிகபட்ச தோல்வியாகும்.  மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்த தொடரில் இடம் பெறாத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.  இலங்கை தொடர் முடிந்த பிறகு இந்திய அணி நியூஸிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.  இதற்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.


மேலும் படிக்க | இனி இவர்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லை: ஓரம்கட்டிய பிசிசிஐ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ