India vs Srilanka 3rd T20: 32 வயதான சூர்யகுமார் யாதவ் சனிக்கிழமையன்று இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 சர்வதேச போட்டியில் ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து இந்தியாவின் 91 ரன்கள் வெற்றி மற்றும் 2-1 தொடரின் வெற்றிக்கு வழி வகுத்தார். ஏழு பவுண்டரிகள் மற்றும் ஒன்பது சிக்ஸர்களுடன் அவரது ஆட்டம், இந்தியாவை 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களுக்கு வலுப்படுத்தியது. இந்த மிகப்பெரிய ஸ்கோர் போர்ட் வெற்றிக்கு வழி வகுத்தது.  தனது இயல்பான ஆட்டத்தை விளையாட அனுமதித்ததற்காக தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை சூர்யா பாராட்டினார்.  முக்கியமான இந்த போட்டியில் இலங்கை 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இலங்கை அணிக்கு எதிராக வாண வேடிக்கை!! ... சதமடித்த சூர்யகுமார் யாதவ்


"விளையாட்டுக்குத் தயாராகும் போது உங்கள் மீது அழுத்தம் கொடுப்பது மிகவும் முக்கியம். எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக விளையாட முடியும். இதில் நிறைய கடின உழைப்பு உள்ளது. சில தரமான பயிற்சி அமர்வுகளும் இதில் அடங்கும். பின்னால் இருந்த எல்லைகள் 59-60 மீட்டர்கள், அதனால் நான் அங்கு சிக்ஸ் அடிக்க முயற்சித்தேன். சில ஷாட்கள் முன்பே தீர்மானிக்கப்பட்டவை, ஆனால் நீங்கள் மற்ற ஸ்ட்ரோக்குகளுக்கும் தயாராக இருக்க வேண்டும்.  பெரும்பாலான நேரங்களில் நான் இடைவெளியைக் கண்டறிந்து களத்தை எனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறேன். டிராவிட் என்னை ரசிக்க வைத்து என்னை வெளிப்படுத்தச் சொல்கிறார்.  இன்னிங்ஸ் சென்ற விதத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 



என்னுடைய சில ஷாட்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை, ஆனால் இவை கடந்த வருடத்தில் நான் விளையாடி வரும் ஷாட்கள், நான் வித்தியாசமாக எதையும் செய்யவில்லை.  எனவே புதிதாக எதுவும் இல்லை. இது 2023ல் ஒரு புதிய தொடக்கமாகும், மேலும் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவேன் என்று நம்புகிறேன்," என்று சூர்யகுமார் கூறினார். சூர்யகுமார் யாத வெறும் ஏழு மாதங்களில் சர்வதேச வடிவத்தில் மூன்றாவது சதம் அடித்துள்ளார்.  மேலும் டி20 போட்டிகளில் அதிவேகமாக 1500 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.  மும்பையில் பிறந்த சூர்யகுமார் 45 T20 போட்டிகளில், 1578 ரன்கள் எடுத்துள்ளார், சராசரியாக 46.41 மற்றும் ஸ்ட்ரைக்-ரேட் 180.34, இதில் மூன்று சதங்கள் மற்றும் 13 அரை சதங்கள் அடங்கும்.


மேலும் படிக்க | விராட் வருவார்... உலகக்கோப்பையை வாங்கித் தருவார்... சீக்காவின் சொல்லும் சீக்ரெட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ