விராட் வருவார்... உலகக்கோப்பையை வாங்கித் தருவார்... சீக்காவின் சொல்லும் சீக்ரெட்

Virat Kohli : விராட் கோலி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என கேள்விகள் எழுந்த நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர் அதற்கு பதிலளித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 7, 2023, 02:05 PM IST
  • இந்தாண்டு இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது.
  • அதற்கு முன் இந்தியா 35 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
  • விராட் கோலி ஒருநாள் போட்டியில் ஓரங்கட்டப்பட உள்ளதாக தகவல்.
விராட் வருவார்... உலகக்கோப்பையை வாங்கித் தருவார்... சீக்காவின் சொல்லும் சீக்ரெட் title=

Virat Kohli : இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி இனி டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி வருகிறது. 2021, 2022 டி20 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து சொதப்பியதால், அணியின் சீனியர் வீரர்களை ஓரங்கட்ட பிசிசிஐ திட்டமிட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. 

அந்த பட்டியலில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் முக்கியமானவர்கள் என கூறப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து, டி20 அரங்கில் இந்திய அணியை வலுபெற செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ வட்டராங்கள் தகவல் வெளியிட்டு வந்தன. எனவே, விராட்,  ரோஹித் உள்ளிட்டவர்கள் இனி டி20 என்றால் ஐபிஎல் தொடரில் மட்டும்தான் பார்க்க முடியும் என ரசிகர்கள் கவலை தெரிவித்து வந்தனர். 

மேலும் படிக்க | IND vs SL: தொடரில் இருந்து வெளியேற்றம்! சஞ்சு சாம்சன் சொன்ன அந்த 3 வார்த்தைகள்!

ஆனால், விராட் கோலி இந்தாண்டு நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலேயே விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல்கள் கூறப்படுகின்றன. எனவே, சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விராட் விளையாடுவார் எனவும் விரைவில் தனது ஓய்வை அறிவிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விராட் விளையாடமல் போவதற்கு வாயப்பே இல்லை என்றும் அவர்தான் நிலைத்து நின்று விளையாடி இளம் அதிரடி வீரர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என மூத்த இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,"அவருக்கு (விராட்) அணியில் நாம் கொடுக்க வேண்டிய பங்கு என்ன? உதாரணத்திற்கு இஷான் கிஷானை பாருங்கள். அவர் எப்படி பந்தை அடிக்கிறார், சமீபத்தில் அவர் இரட்டை சதம் கூட அடித்துள்ளார். 

இந்த வீரர்களை ஆடுகளத்தில் அவர்களின் இயல்பான விளையாட்டை விளையாடச் சொல்லுங்கள், அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டாம். இஷான் கிஷானைப் போலவே, துணிந்து அடித்து விளையாடும் இன்னும் இரண்டு அல்லது மூன்று வீரர்கள் இந்திய அணிக்கு தேவை. அதுதான் தலையாய பிரச்னை. இந்த வரிசையில் ஆல்-ரவுண்டர்கள், பேட்டிங் ஆல்-ரவுண்டர்கள், பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்கள் தேவை.

"அணியில் இதுபோன்ற வீரர்களின் சேர்க்கை இருக்க வேண்டும். மேலும் ஒருநாள் கிரிக்கெட் குறித்து என்றால், கடந்த காலங்களில் கௌதம் கம்பீர் எப்படி நிலைத்து நின்று விளையாடி அணிக்கு முக்கிமான பங்கை அளித்தரோ அதுபோல, இந்த முறையும் விராட் கோலி நிலைத்து நின்று விளையாடுவார். இஷான் கிஷன் இரட்டை சதம் அடித்த போது, விராட் சதம் அடித்தார். 

விராட் கோலியால் தான் இஷான் கிஷான் போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது.  வீரர்களுக்கு அந்த சுதந்திரம் கொடுக்க வேண்டும். வீரர்கள் விரும்பியதை செய்ய வேண்டும். ஆட்டமிழப்பதை எண்ணி விளையாடாமல், தைரியமாக விளையாட வேண்டும். அதுவே இந்திய அணிக்கு தேவை" என்றார். 

இந்தாண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக, இந்திய அணி மொத்தம் 35 போட்டிகளை விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | IND vs SL: 3வது டி20-ல் இந்திய அணியில் ஏற்பட்டு இருக்கும் மாற்றங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News