இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று, தொடங்கி நடைப்பெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரம்பத்தில் நிதானமான விளையாட்டை வெளிப்படுத்திய போதிலும், இந்தியாவிற்கு ஆரம்ப அடியாய், துவக்க ஆட்டகாரர் தவான் 23(35) ரன்களில் வெளியேறினார். அவரின் பின்னால் புஜாராவும் 23(39) ரன்களுக்கு வெளியேறினார்.


பின்னர் சற்று சுதாரித்துக் கொண்ட இந்தியா சற்று நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. களத்திலிருந்த முரளி விஜய் உடன் கைகோர்த்த கேப்டன் கோலி, ஆக்ரோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்த இந்திய அணியின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்தது. விஜய் மற்றும் கோலி என இருவரும் அடுத்ததடுத்து தங்களது அரை சதத்தினை பூர்த்தி செய்தது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது.


அதேப் போல் தங்களது சதத்தினையும் அடுத்தடுத்து பூர்த்தி செய்தனர். கோலி தனது சதத்தினை பூர்த்திசெய்வாரா இல்லையா என பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


பின்னர் தனது 155(267) ரன்னில் முரளி விஜய் ஆட்டமிழக்க, பின்னர் களமிரங்கிய ரஹானே 1(5) ரன்களில் வெளியேறினார். எனினும் வீரட் கோலி தனது 8-வது 150-னுடன் களத்தில் நின்றார். 


இதனால் நேற்றைய நிலவரப்படி இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களுக்க 4 விக்கெட் இழந்து 371 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 156(186) மற்றும் ரோகித் சர்மா 6(14) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.


இதனையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். ஆட்டத்தின் 108-வது ஓவரில் விராட் கோலி 238 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார்.


இதுவரை இவர் 6 இரட்டை சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2017-ஆம் ஆண்டில் இது இவரது மூன்றாவது இரட்டை சதமாகும். இதனால் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக முறை இரட்டை சதம் அடித்தவர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 


எதிர்முனையில் இருந்த ரோகித்சர்மாவும் தன்பங்கிற்கு தனது அரைசதத்தினை பூர்த்தி செய்தார். பின்னர் தனது 65-வது ரன்னில் சந்தகன் சுழலில் சிக்கி வெளியேறினார். இரண்டாவது நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 500 ரன்கள் எடுத்தது.



உணவு இடைவேளைக்குப் பின்னர் கோலியுடன் அஷ்வின் கைகோர்த்துள்ளார்.


தற்போதைய நிலவரப்படி இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 122 ஓவர்களுக்க 5 விக்கெட் இழந்து 518 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 239(277) மற்றும் அஷ்வின் 4(14) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.