IND vs WI: ஒரே ஒரு விக்கெட்.... மீண்டும் சாதனை செய்ய தயாராகும் குல்தீப் யாதவ்
ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 100 விக்கெட்டுகளை எடுக்க இன்னும் ஒரு விக்கெட் தூரத்தில் உள்ளார்.
கட்டாக்: ஒருநாள் போட்டி வரலாற்றில் இரண்டாவது முறையாக ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரரான குல்தீப் யாதவ், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 100 விக்கெட்டுகளை எடுக்க இன்னும் ஒரு விக்கெட் தொலைவில் உள்ளார். கடந்த புதன்கிழமை இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே நடந்த ஒருநாள் போட்டியில் குல்தீப் ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்து சாதனை செய்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் டீம் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்தது. இதனால் கட்டாக்கில் நடக்கும் இன்றை போட்டி ஒருநாள் தொடர் யாருக்கு என்று தீர்க்கமானிக்கும் போட்டியாக உள்ளது.
குல்தீப் 22 வது இந்தியர் ஆவார்:
(இன்று) ஞாயிற்றுக்கிழமை பராபதி ஸ்டேடியத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 25 வயதான குல்தீப் ஒரு விக்கெட்டை கைப்பற்றினால், அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எடுத்த 22 வது இந்திய வீரர் ஆவார்.
குல்தீப் பெயரில் பதிவு செய்யப்படும் சாதனை:
இந்திய வீரர் குல்தீப் இதுவரை 54 ஒருநாள் போட்டிகளில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் தனது 100 விக்கெட்டுகளை முடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் மிக வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார். 55 ஒருநாள் போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பெயரில் இந்த சாதனை தற்போது உள்ளது.
சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப்பின் இடம்:
குல்தீப் 100 விக்கெட்டுகளை எட்டிய எட்டாவது இந்திய சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்வார். முன்னாள் லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் மிக வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளர் ஆவார். அவர் 269 ஒருநாள் போட்டிகளில் 334 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
குப்தீப் யாதவும் அவரது ஹாட்ரிக்:
புதன்கிழமை ஏ.சி.ஏ-வி.டி.சி.ஏ ஸ்டேடியத்தில் விளையாடிய ஒருநாள் போட்டியில் குல்தீப் ஹாட்ரிக் எடுத்தார். இந்த ஹாட்ரிக்கும் சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் இது ஒருநாள் போட்டிகளில் அவரது இரண்டாவது ஹாட்ரிக் ஆகும். இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்த ஒரே இந்தியர் அவர்தான். இதற்கு முன்னர் 21 செப்டம்பர் 2017 அன்று கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குல்தீப் ஹாட்ரிக் எடுத்திருந்தார்.
இன்று நடைபெறும் பராபதி மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கப் போகிறது. எனவே இன்றைய போட்டியில் ஒரு பெரிய ஸ்கோரை எதிர்பார்க்கலாம். இந்த மைதானத்தில் இந்தியா 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 12 போட்டிகளில் வெற்றி மற்றும் நான்கு தோல்வி கண்டுள்ளது.
இந்தியா அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), மாயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த், சிவம் துபே, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் சதாவ் ஷமி, ஷார்துல் தாக்கூர்.
மேற்கிந்திய தீவுகள்: கரேன் பொல்லார்ட் (கேப்டன்), சுன்யே எம்ப்ரீஸ், ஷாய் ஹோப், கைரி பியர், ரோஸ்டன் சேஸ், அல்சாரி ஜோசப், ஷெல்டன் கோட்ரெல், பிரெண்டன் கிங், நிக்கோலஸ் பூரன், சிம்ரான் ஹெட்மியர், எவின் லூயிஸ், ரோமரியா ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், கெமோ பால், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.