புனே: இந்தியா - இங்கிலாந்து இடையில் நடைபெற்றுவரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த புதிய சாதனையை இந்தியாவும் இங்கிலாந்தும் ஞாயிற்றுக்கிழமை உருவாக்கின.
மகாராஷ்டிராவின் புனேவில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்த சாதனை உருவாக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புனேவில் உள்ள கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் தற்போது வரை மொத்தம் 59 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடந்து வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்தியா இதுவரை ஏழு சிக்ஸர்களை அடித்தது.



முன்னதாக, 2019 ஆம் ஆண்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் போது இரு அணிகளும் 57 சிக்ஸர்கள் அடித்த சாதனையை நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் உருவாக்கின.


2017 ஆம் ஆண்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 56 சிக்ஸர்கள் விளாசப்பட்டன. தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில், பென் ஸ்டோக்ஸ் 10 பிக்ஸர்களை அடித்தார், அவர் 52 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து ஸ்டாண்ட்-இன் கேப்டன் ஜோஸ் பட்லர் வென்றார்.


இன்று (ஞாயிற்றுக்கிழமை)  மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக ஆடியது.


Also Read | Michael Vaughan: இந்தியா தற்காப்புடன் பேட்டிங் செய்வது உண்மையா?


இந்திய அணியின் வீரர்கள் பட்டியலில் இந்தியா ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது, குல்தீப் யாதவுக்கு பதிலாக டி நடராஜன் களம் இறங்கியுள்ளார். அதேபோல, இங்கிலாந்து அணியில் டாம் குர்ரானுக்கு பதிலாக மார்க் வூட். டவுன் இடம் பெற்றுள்ளார்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR