இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடக்க விருக்கும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட  தொடரில் இரண்டு அணியும் பங்கேற்கிறது. இதற்கான போட்டி அட்டவணை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெஸ்ட் போட்டிக்கு முன்னரே இரண்டு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடும். அதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 21-ம் தேதி முதல் தொடங்குகிறது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி தற்போது தான் வெஸ்ட் இண்டீஸ் செல்ல இருக்கிறது. 


போட்டி அட்டவணை:-


ஜூலை 21   முதல் டெஸ்ட் ஆன்டிகுவா


ஜூலை 30   2-வது டெஸ்ட் ஜமைக்கா


ஆகஸ்ட் 9   3-வது டெஸ்ட் செயின்ட் லூசியா


ஆகஸ்ட் 18  4-வது டெஸ்ட் டிரினிடாட் & டொபாக்கோ