ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டி தொடரில் புனேயில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 333 ரன் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தர்மசாலாவில் நாளை தொடங்குகிறது


இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் தொடரை வெல்வது யார்? என்பதில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. போட்டி ‘டிரா’ வில் முடிந்தால் டெஸ்ட் தொடர் சமநிலையில் முடியும்.


முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெறும் தர்மசாலா ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இந்தியாவின் வேகப் பந்தைவிட ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சு வலுவானது என்பதால் இந்த டெஸ்ட் கடுமையானதாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வீராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி கடும் சவாலாக இருக்கும் என்பதால் தொடரை கைப்பற்ற இந்தியா கடுமையாக போராட வேண்டும்.


இந்திய அணியின் வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமி அணியில் இடம் பெறுவது சந்தேகம். தோள்பட்டை காயத்தால் கோலி அவதிப்பட்டு வருகிறார். இதனால் மும்பையை சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் சேர்க்கப்படுவார் என தெரிகிறது.