வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் அடுத்த ஆண்டு சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போட்டி அடுத்த ஆண்டு ஐதராபாத்தில் பிப்ரவரி 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 


டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு இந்தியாவில் விளையாட வாய்ப்பளிக்க வேண்டியது கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு என தெரிவித்து ள்ளார். வங்காளதேச கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க அந்தஸ்து பெற்ற 17 ஆண்டுகளில் அந்நாடு இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது இதுதான் முதல் முறையாகும்.