4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி தொடர்: ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி!!
நியூசிலாந்தில் நடைபெற்ற 4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பயஸ் இணை அணி காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
நியூசிலாந்தில் 4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் இன்று நடைப்பெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் போட்டியிட்டனர்.
இதில், முதல் கோலை இந்திய அணியை சேர்ந்த விவேக் பிரசாத் 11வது நிமிடத்திலும், ஜப்பான் அணி 13வது நிமிடத்தில் போட்டது. இதனால் 1-1 என்ற புள்ளி கணக்கில் ஆட்டம் சமன் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, 29வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பினை வருண் குமார் கோல் ஆக்கினார். இதனால் இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது.தொடர்ந்த ஆட்டத்தில், 48வது நிமிடத்தில் ஜப்பானின் பெனால்டி கார்னர் வாய்ப்பு வீணானது.
இந்நிலையில், 57வது நிமிடத்தின்கடைசி சுற்றில் ஹர்ஜீத் சிங் அடித்த கோல் மற்றும் 58வது நிமிடத்தில் ராமன்தீப் சிங் அடித்த கோலால் 4-2 புள்ளி கணக்கில் இந்திய அணி வெற்றிக்கு அழைத்து செல்லப்பட்டது.
இதை தொடர்ந்து, நாளை நடைபெறும் போட்டியில் பெல்ஜியம் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் இறுதி போட்டியில் இந்திய அணி விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.