இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி நேற்று (புதன்கிழமை) 20 ஓவர் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கனவே விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது. தற்ப்போது நேற்று நடத்த டி-20 போட்டியையும் இந்திய அணி 1-0 கணக்கில் வென்றது.


இப்போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. 


இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக முனவீரா 53 ரன்களும், ப்ரியஞ்சன் 40 ரன்களும் எடுத்தனர். 


இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சகால் 3, குல்தீப் 2, புவனேஷ்வர், பும்ரா தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 


இதனையடுத்து 171 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. முதலில் களம் இறங்கிய  ரோஹித் சர்மா 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ராகுலுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி இலங்கை அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 


24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய  மணீஷ் பாண்டே  கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர். 19.2 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 


இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் கோஹ்லி(82) இலங்கை அணிக்கு எதிராக தொடர்ந்து 4 அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். 


இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணிக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது.