IND vs AUS: ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலக் கோப்பை 2023 தொடரின் 5ஆவது லீக் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியின் டாஸை ஆஸ்திரேலியா வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பும்ராவின் தாக்குதல்


டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கிய நிலையில், பும்ரா - சிராஜ் இணை இந்திய பந்துவீச்சு தாக்குதலை தொடங்கினர். இந்திய தாக்குதலுக்கு முதலில் பலியானார், மிட்செல் மார்ஷ். பும்ரா பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்று விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவர் டக்-அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அந்த கேட்ச்சை பிடித்ததன் மூலம் இந்திய அணி சார்பில் உலகக் கோப்பையில் அதிக கேட்ச்களை பிடித்தவர் என்ற மைல்கல்லை எட்டினார். 


வார்னர் சாதனை


தொடர்ந்து, வார்னர் உடன் ஸ்மித் மிக மிக நிதானமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இருவரும் செட்டிலாகி அரைசதம் நோக்கி நகர்ந்து வந்தனர். அந்த சமயத்தில் பந்துவீச்சு தாக்குதலுக்கு வந்த குல்தீப் யாதவ் வார்னரை 41 ரன்களில் தூக்கினார். இருப்பினும், வார்னர் இந்த போட்டியில் 7 ரன்களை அடித்தபோது, உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்களை பதிவு செய்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.


மேலும் படிக்க | யோவ் மிலிட்ரி நீ எங்க இங்க... சேப்பாக்கம் மைதானத்தில் ஓடி வந்த ஜார்வோ - யார் இவர்?


ஜடேஜாவின் சுழல் ஜாலம்


தொடர்ந்து, ஸ்மித் - லபுஷேனும் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து வந்தனர். இருப்பினும், இம்முறை ஜடேஜா ஸ்மித்தின் விக்கெட்டை அற்புதமான ஸ்பின் மூலம் கைப்பற்றினார். தொடர்ந்து, 30 ஓவரை ஜடேஜா வீசினார். அதில், செட்டிலாகி இருந்த லபுஷேனையும் மற்றும் அடுத்து இறங்கிய அலெக்ஸ் கேரியை ஒரே ஓவரில் தூக்கினார். இதில் ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டர் ஆட்டம் கண்டது.


ஸ்டார்க் ஆறுதல்


தொடர்ந்து, மேக்ஸ்வெல்லை குல்தீப் யாதவும், கேம்ரூன் கிரீனை அஸ்வினும் ஆட்டமிழக்கச் செய்தனர். டெயிலெண்டர்களில் ஸ்டார்க் மட்டும் சற்று ரன்களை குவித்தார். இதனால், 49.3 ஓவர்களில் 199 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா ஆல்-அவுட்டானது. கடைசி நேரத்தில் ஸ்டார்க் 28 ரன்களை எடுத்து ஆறுதல் அளித்தார். ஜடேஜா 3, பும்ரா, குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், சிராஜ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.



எளிதாக வெற்றி பெறுமா இந்தியா?


இதில், பும்ரா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகியோர் தலா 10 ஓவர்களை வீசினர். அதில், பும்ரா 35 ரன்களையும், அஸ்வின் 34 ரன்களையும், குல்தீப் 42 ரன்களையும், ஜடேஜா 28 ரன்களையும் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு நல்ல ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைந்தால் எளிதாக வெற்றி பெறலாம். எனினும் தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தால், இந்தியா சிரமப்படவும் வாய்ப்புள்ளது. ஆடுகளத்தில் தற்போது பிளவுகள் அதிகம் இருக்கும் என்பதால், சுழற்பந்துவீச்சாளர்கள் ஸாம்பா, மேக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பாக பந்துவீச வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க | உலக கோப்பை: ஆஸ்திரேலியா பேட்டிங்..! இந்திய பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ