U19 ஆசிய கோப்பை: 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
இலங்கையின் மொரட்டுவாவில் சனிக்கிழமை நடைப்பெற்ற U-19 ஆசிய கோப்பை மோதலில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது!
இலங்கையின் மொரட்டுவாவில் சனிக்கிழமை நடைப்பெற்ற U-19 ஆசிய கோப்பை மோதலில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது!
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அர்ஜுன் ஆசாத் மற்றும் 3-வது பேட்ஸ்மேன் என்.டி. திலக் வர்மா சதம் அடித்து அசத்தியதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் குவித்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அர்ஜுன் (111 பந்துகளில் 121) மற்றும் திலக் (119 பந்துகளில் 110) 183 ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர்.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களான நசீம் ஷா (3/52), அப்பாஸ் அப்ரிடி (3/72) ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளுடன் இந்திய அணியை சிதைத்தபோது, மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் தனிநபர் ஸ்கோரை 20-னை தாண்டவில்லை.
இதனைத்தொடர்ந்து 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. இந்தியாவின் பந்துவிச்சை சமாளிக்க இயலாமல் அடுத்தடுத்து வெளியேறிய பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டத்தின் 46.4 பந்தில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் அதர்வா அங்கோலேகர் 10 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
நடுத்தர வேகப்பந்து வீச்சாளர்களான வித்யாதர் பாட்டீல், சுஷாந்த் மிஸ்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாகிஸ்தான் பேட்டிங் செய்கையில்., பாகிஸ்தான் கேப்டன் ரோஹைல் கான் 108 பந்துகளில் 117 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கா போராடினார். எனினும் அவரது முயற்சி இறுதியில் தோல்வியிலேயே முடிந்தது.
Brief Scores:
இந்தியா 50 ஓவர்களில் 305/9 (அர்ஜுன் ஆசாத் 121, என்.டி. திலக் வர்மா 110, நசீம் ஷா 3/52, அப்பாஸ் அஃப்ரிடி 3/72).
பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் 245 (ரோஹைல் கான் 117, ஹரிஸ் கான் 43, அதர்வா அங்கோலேகர் 3/36).