இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் Parthiv Patel அனைத்து வித போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்
பார்த்திவ் அக்கப்பூர்வமான விதத்தில் தனது கரியரை தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரின் வருகையின் பின்னர் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்தியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் புதன்கிழமை (டிசம்பர் 9) அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
35 வயதான பார்த்திவ் படேல், 25 டெஸ்ட், 38 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் இரண்டு T20 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில், குஜராத் அணிக்காக விளையாடிய பார்த்திவ், 194 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். பார்த்திவ் படேல் ட்விட்டரில் தான் ஓய்வுபெறும் அறிவிப்பை வெளியிட்டார்.
பார்த்திவுக்கு 2002 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பரான மிகவும் இளைய வீரராகி பார்த்திவ் சாதனை படைத்தார். பார்த்திவ் இந்திய அணியில் (Team India) அறிமுகமானபோது அவரது வயது 17 வயது மற்றும் 153 நாட்கள் ஆகும்.
பார்த்திவ் அக்கப்பூர்வமான விதத்தில் தனது கரியரை தொடங்கினாலும், தினேஷ் கார்த்திக் மற்றும் மகேந்திர சிங் தோனி (MS Dhoni) ஆகியோரின் வருகையின் பின்னர் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
ALSO READ: ஒரு கிட்னியுடன் உலகை வென்றேன்: Tweet மூலம் அதிரடியாய் அறிவித்த Anju Bobby George
பார்த்திவ் படேல் (Parthiv Patel) அகமதாபாதில் 2004 ஆம் ஆண்டு தனது முதல் ரஞ்சி கோப்பையில் ஆடினார்.
2004 க்குப் பிறகு பார்த்திவுக்கு சில போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தாலும், அந்த வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்தத் தவறிவிட்டார். இருப்பினும், பார்த்திவ் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மற்றும் டொமஸ்டிக் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்.
IPL 2015 இல், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்காக விளையாடிய பார்த்திவ் 339 ரன்கள் எடுத்து தனது அணியில் நான்காவது அதிக ரன் எடுத்த வீரராக இருந்தார். அதே ஆண்டில், பார்த்திவ் தனது குஜராத் அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் முதல் சதத்தை அடித்தார்.
2016 ஆம் ஆண்டில், காயமடைந்த தோனிக்கு ஸ்டாண்ட்-பை-யாக பார்த்திவ் இந்திய அணியில் திரும்ப அழைக்கப்பட்டார். அதன் பிறகு சாஹா காயமடைந்தபோது, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் பார்த்திவ் சேர்க்கப்பட்டார்.
IPL 2020 இல், பார்த்திவ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம் பெற்றார்.
ALSO READ: அன்புக்கு அப்பா, ஆட்டத்துக்கு விராட் கோலி என்று கூறுகிறாராம் இந்த cricketer-ன் மகன்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR