3-வது ஒருநாள்; 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 243 ரன்கள் குவித்துள்ளது!
14:56 28-01-2019
மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது!
14:21 28-01-2019
200 ரன்களை கடந்தது இந்திய அணி..
தற்போது - 37 ஓவர்கள் | 3 விக்கெட் | 200 ரன்கள்
களத்தில் - அம்பத்தி ராயுடு 26(24) | தினேஷ் கார்த்திக் 14(20)
13:44 28-01-2019
இரண்டாவது விக்கெட்டை இழந்தது இந்தியா... அணியின் எண்ணிக்கை 152-ஆக இருந்த நிலையில் ரோகித் ஷர்மா 62(77) ரன்களில் வெளியேறினார்!
தற்போது - 29 ஓவர்கள் | 2 விக்கெட் | 152 ரன்கள்
களத்தில் - விராட் கோலி 57(69) | அம்பத்தி ராயுடு 0(1)
13:37 28-01-2019
விராட் கோலி, ரோகித் ஷர்மா என இருவரும் தங்களது அரை சதத்தினை பூர்த்தி செய்துள்ளனர்..
தற்போது - 27 ஓவர்கள் | 1 விக்கெட் | 145 ரன்கள்
களத்தில் - ரோகித் ஷர்மா 62(73) | விராட் கோலி 51(62)
12:22 28-01-2019
முதல் விக்கெட்டை இழந்தது இந்தியா... அணியின் ரன் 39 இருந்த நிலையில் வெளியேறினார் ஷிகர் தவான் 28(27)!
தற்போது - 9 ஓவர்கள் | 1 விக்கெட் | 39 ரன்கள்
களத்தில் - ரோகித் ஷர்மா 11(23) | விராட் கோலி 0(4)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 243 ரன்கள் குவித்துள்ளது!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒருநாள் மற்றும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைப்பெற்று வரும் நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுன்கனேய் பே ஓவல் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மார்டின் குப்டில் 13(15), கோலின் முன்றோ 7(9) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்நுத களமிறங்கிய ரோஸ் டைலர் நிதானமாக விளையாடி 93(106) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக டாம் லாத்தம் 51(64) ரன்கள் குவித்தார, எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி ஆட்டத்தின் 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா தரப்பில் மொகமது ஷமி 3 விக்கெட், சாஹல், ஹார்டிக் பாண்டயா, புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளை குவித்தனர். இதனையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது!