இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, 50 ஓவர்கள் முடிவில் 287 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரராக  களமிறங்கிய டீகாக் 124 ரன்கள் விளாசி அவுட்டானார். வான்டர் டசன் 52 ரன்கள் எடுத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | மைதானத்தில் தாலாட்டு பாடிய கோலி..! வைரல் வீடியோ


பின்னர், 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, முக்கியமான விக்கெட்டுக்களை அடுத்தடுத்து இழந்து தடுமாற்றத்துக்குள்ளானது. சிறப்பாக விளையாடிய தவான் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 84 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். ஒரு நாள் போட்டியில் அவர் அடித்த 64வது அரைசதம் இதுவாகும். ரிஷப் பன்ட் வந்த முதல் பந்திலேயே அவுட்டாகி நடையைக் கட்டினார்.


:ALSO READ | கே.எல். ராகுல் தலைமையில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணி!


இதன்பிறகு களமிறங்கிய சூர்யா குமார் யாதவ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் தீபக் சாஹர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடி அவர் 34 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். இவர் களத்தில் இருக்கும் வரை இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால், தீபக் சாஹர் அவுட்டானதும், மேட்ச் தென்னாப்பிரிக்கா வசம் சென்றது. இறுதியாக இந்திய அணி 283 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் படுதோல்வியுடன் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR