சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு நாள் போட்டிகளில் 280 முதல் 300 ரன்கள் அடித்தால் அது இமாலய இலக்காக இருந்தது. முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் முதல் பத்து ஓவர்வரை விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. ஆனால் இந்த நடைமுறை 2015ஆம் ஆண்டிற்கு பிறகு மொத்தமாக மாறியது. குறிப்பாக 20 ஓவர் கிரிக்கெட் (T20 Match) போட்டிகள் அதிகம் நடைபெறுவதால் இந்த போக்கு மாறியுள்ளது.
ALSO READ | இவர்கள்தான் இந்தியாவின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம்
350 ரன்கள் அடித்தாலும் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிகள் எளிதாக அதனை அடித்து வெற்றி பெற்று வருகிறது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளிலும் இதேதான் நடந்தது. இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் 287 ரன்கள் அடித்தும், தென்ஆப்பிரிக்கா அணி 48.1 ஓவரில் சேஷ் செய்து வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. கேல் ராகுல் (KL Rahul) தலைமையில் விளையாடிய இந்திய அணி இந்த ஒரு நாள் தொடரை இழந்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-1 என்ற நிலையில் இழந்தது.
இன்று கேப்டவுன் மைதானத்தில் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதுவரை அணியில் எடுக்கப்படாத ருத்ராஜ், இசான் கிசன் மற்றும் சூர்யகுமார் யாதவ் போன்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பவுலிங்கில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக தீபக்சகார், சாஹால்க்கு பதிலாக ஜெயந்த் யாதவ் இடம்பெறுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர்.
ALSO READ | 2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR