India Made History At Asian Games 2023: உலகளாவிய விளையாட்டு அரங்கில் இந்தியாவின் எழுச்சிக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 இல் புதிய அங்கீகாரம் கிடைத்தது. ஹாங்ஜோவில் நடந்து வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்திய வீரர்கள் மேலும் அதிக பதங்கங்கள வெல்ல வாய்ப்பு இருப்பதால், இந்தமுறை வரலாற்று சாதனை செய்யவுள்ளது. இதுவரை அதிகபட்சமாக கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 70 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் முந்தைய சிறந்த சாதனையாகும். அதனை முறியடித்து, இன்று (புதன்கிழமை) முதல் பாதியில் மேலும் இரண்டு பதக்கங்களைச் சேர்த்ததன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையை 71 ஆக உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 15 தங்கம் வென்றது


2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா மொத்தம் 70 பதக்கங்களை வென்றிருந்தது. அப்போது இந்தியா 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் என மொத்தம் 70 பதக்கங்களை வென்றிருந்தது. அதேபோல் 1951-ல் நடந்த முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 15 தங்கம் வென்றது.


1951 முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நடத்தப்பட்டது. அப்போது இந்தியா 15 தங்கம், 16 வெள்ளி, 20 வெண்கலம் (மொத்தம் 51 பதக்கங்கள்) வென்றிருந்தது. அப்போது 15 தங்கப் பதக்கங்கள் வெல்வது சரித்திர சாதனையாகும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 15 தங்கப் பதக்கங்களை வென்ற இந்தியாவின் சாதனை நீண்ட காலமாக அப்படியே இருந்தது. இந்தியா பல ஆசிய விளையாட்டுகளில் ஒன்றன் பின் ஒன்றாக விளையாடியது. ஆனால் 15 தங்கம் வென்ற சாதனை அப்படியே இருந்தது.


மேலும் படிக்க - Asian Games 2023: 15வது தங்கம்! பதக்கங்களை அள்ளும் வீர மங்கைகள்.. ஜொலிக்கும் இந்தியா!


ஆசிய விளையாட்டுப் போட்டி 2018 நிலவரம்


1982 ஆம் ஆண்டு இந்தியா மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தியபோது, ​​இந்தியா இந்த சாதனையை நெருங்கியது. அந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 13 தங்கம், 19 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை வென்றது. ஆனால் இந்திய அணி 1951ல் வென்ற 15 தங்கப் பதக்கதை விட பின்தங்கி இருந்தது. ஆனால் 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது முந்தைய சாதனைகளை முறியடித்து 16 தங்கம் உட்பட மொத்தம் 70 பதக்கங்களை வென்றது.



ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 பதக்க பட்டியல்: நான்காவது இடத்தில் இந்தியா


ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 தொடரில் இதுவரை இந்தியா 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 71 பதக்கங்கள் கைப்பற்றி உள்ளது. 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்குப் பின்னால் இந்தியா தற்போது பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. சீனா 300 ஐ நெருங்குகிறது.


வரிசை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா 161 90 46 297
2 ஜப்பான் 33 47 50 130
3 தென் கொரியா 32 42 65 139
4 இந்தியா 16 26 29 71
5 உஸ்பெகிஸ்தான் 14 15 21 50

மேலும் படிக்க - முடிந்தது பயிற்சி ஆட்டங்கள்... இது சும்மா டிரைலர்தான் - அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய டாப் 5 பௌலர்கள்


இன்றைய நிலவரம் (11 ஆம் நாள்)


ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம்


இந்தியா 69 பதக்கங்களுடன் 10 ஆம் நாள் (நேற்று) முடிவடைந்தது. நான்காவது இடத்தில் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. மேலும் இன்று (11 ஆம் நாள்) பதக்கத்தை கைப்பற்ற அதிக நேரம் எடுத்துக்கொள்ள வில்லை. ராம் பாபூவும் மஞ்சு ராணியும் இன்றைய முதல் நிகழ்வான 35 கிமீ ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் (5:51:14) வென்றனர். சீனா தங்கப் பதக்கத்தை (5:16:41), ஜப்பான் வெள்ளி (5:22:11) வென்றது.


ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: வில்வித்தையில் தங்கம்


சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, வில் வீரர்களின் தங்கம் வெல்லும் முயற்சி சிறந்ததாக அமைந்தது. கூட்டு வில்வித்தை கலப்பு குழு போட்டியில் ஜோதி சுரேகா வென்னம் மற்றும் பிரவின் ஓஜஸ் தியோடலே ஆகியோர் தென் கொரியாவின் சேவோன் சோ மற்றும் ஜேஹூன் ஜூவை 159-158 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றனர். 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தையில் இந்தியாவின் முதல் தங்கம் இதுவாகும். இதமூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையை 71 ஆக உயர்ந்தது.


மேலும் படிக்க - இந்த உலகக் கோப்பையை தூக்கப்போகும் கேப்டன் இவர்தான்... பிரபல ஜோசியரின் பக்கா கணிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ