ICC World Cup 2023: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று ஆட்டங்கள் நாளை (அக். 5) முதல் தொடங்குகின்றன. குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, கடந்த இரண்டு உலகக் கோப்பையிலும் இரண்டாமிடம் பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இருப்பினும், உலகக் கோப்பை தொடருக்கான தொடக்க விழா நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அக்டோபர், நவம்பர் என பருவமழை காலத்தில் இத்தகைய பெரிய தொடரை நடத்துவது மிகவும் ரிஸ்கான ஒன்று எனவும், பல முக்கிய போட்டிகள் மழையால் முழுமையாக ரத்தாகவும் வாய்ப்புள்ளதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதற்கு முன்னோட்டமாக பயிற்சி ஆட்டங்களில் பல போட்டிகள் மழையால் ரத்தானதையும் நம்மால் பார்க்க முடிந்தது. 10 பயிற்சி ஆட்டங்கள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், 4 ஆட்டங்கள் முடிவில்லாமல் ரத்து செய்யப்பட்டது.
பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்ற கவுகாத்தி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் குரூப் சுற்று போட்டிகள் ஏதும் நடக்காது என்றாலும், சென்னை, பெங்களூரு மற்றும் வட மாநிலங்களிலும் சில இடங்களில் வரும் நாள்களில் மழைக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த தொடர் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல், அனைத்து போட்டிகளும் நடைபெற வேண்டும் என்பேத அனைவரின் தற்போதைய வேண்டுதலாக இருக்கும்.
மேலும் படிக்க | உலகக் கோப்பையில் திடீர் ஷாக்... தொடக்க விழா ரத்து? - முழு விவரம்
இது ஒருபுறம் இருக்க பயிற்சி ஆட்டங்களில் சில கவனிக்கத்தக்க விஷயங்களும் நடந்துள்ளன. அதனை நினைவில் வைத்துக்கொள்வதன் மூலம் உலகக் கோப்பை மீதான எதிர்பார்ப்பு மேலும் பன்மடங்கு கூட வாய்ப்புள்ளது. இலங்கை அணி வங்கதேசம், ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது என சொல்வது விட வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் இலங்கை அணியை வீழ்த்தின என சொல்வதே சரியாக இருக்கும். குறிப்பாக, நேற்றைய ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் என்பது உலகத் தரத்தில் இருந்ததை மறுக்க முடியாது.
மறுபுறம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை தங்களின் அணியின் வலுவை இதில் முழுமையாக பரிசோதித்திருக்கும் எனலாம். பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா அணிகள் வெற்றி பெறாவிட்டாலும் தங்கள் அணியில் உள்ள நிறைகுறைகளை இதில் கண்டிருப்பார்கள். இந்திய அணிக்கு இரண்டு போட்டிகளும் மழையால் ரத்தானது. இங்கிலாந்து முரட்டு பார்மில் இருக்கிறது. இவை அனைத்தும் உலகக் கோப்பையை யார் வெல்வார்கள் என்ற கேள்வியை இன்னும் கடினமாக்கியுள்ளது. அந்த வகையில், இந்த பயிற்சி ஆட்டங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 5 பந்துவீச்சாளர்களை இதில் காணலாம். zeenews.india.com/tamil/sports/top-5-best-fast-bowlers-to-be-watch-in-icc-world-cup-2023-dale-steyn-predictons-466256
1. முகமது நபி
ஆப்கானிஸ்தானின் அனுபவ வீரரான முகமது நபி இதில் முதலிடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் பயிற்சி போட்டி மழை காரணமாக நடைபெறாவிட்டாலும், நேற்றைய இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 2011 உலகக் கோப்பை டூ 2023 உலகக் கோப்பை - இந்த 7 வீரர்களுக்கு எண்டே கிடையாது!
2. உசாமா மிர்
பாகிஸ்தான் அணியின் பலவீனங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது நேர்த்தியான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதுதான். ஆனால் உஸ்மா மிர் அந்த அணிக்கு இந்த பயிற்சி ஆட்டத்தில் சற்று ஆறுதல் அளித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2-68 (10 ஓவர்கள்), ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2-31 (5 ஓவர்கள்) என 4 விக்கெட்டை கைப்பற்றினார்.
3. மார்னஸ் லபுஷேன்
ஆடம் ஸாம்பா, மாக்ஸ்வெல் என ஆஸ்திரேலியாவின் ஆஸ்தான ஸ்பின்னர்கள் நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே போட்டியில் லபுஷேன் பின்னுக்குத் தள்ளினார். மிடில் ஓவர்களில் ஓவர்களை தள்ளுவதற்கு மட்டுமின்றி, விக்கெட்டுகளையும் வீழ்த்துவேன் என லபுஷேன் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார். லெக் ஸ்பின்னரான இவர் நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளையும், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 1 விக்கெட்டையும் என 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நெதர்லாந்து போட்டி மழை காரணமாக முடிவின்றி ரத்தானது.
4. மெஹதி ஹாசன்
வங்கதேச ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹாசன் இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் 9 ஓவர்கள் வீசி 36 ரன்களை கொடுத்து 3 விக்ககெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்களை வீசி 10 ரன்களை கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
5. ரீஸ் டோப்ளி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மழையால் ரத்தானது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டோப்ளி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் படிக்க | இந்த உலகக் கோப்பையை தூக்கப்போகும் கேப்டன் இவர்தான்... பிரபல ஜோசியரின் பக்கா கணிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ