ஒலிம்பிக் ஹாக்கி : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா - 52 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி
India Australia Hockey News : ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்றதுடன், காலிறுதி சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதி செய்தது.
India Australia Hockey match Highlights : பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இப்போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் ஒலிம்பிக் போட்டியில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாறு படைத்திருக்கிறது. இப்போட்டி தொடங்கிய 12 மற்றும் 13 வது நிமிடங்களில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை போட்டது. அப்போதே இந்திய அணி இப்போட்டியில் முன்னணி பெற்றுவிட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணியும் கடும் போட்டியைக் கொடுத்தது.
அந்த அணி ஒவ்வொரு நிமிடமும் கோல் எடுக்க கடுமையாக முயற்சி செய்தது. போட்டியின் 25வது நிமிடத்தில் அந்த அணி முதல் கோலை போட்டது. அடுத்த ஐந்து நிமிடத்தில் இந்திய அணி மூன்றாவது கோலை போட்டது. இதனால், வெற்றிக்கு அருகாமையில் இந்திய அணி சென்றது. மீண்டும் ஒரு கோலை இந்திய அணி போட்டபோது, ஆஸ்திரேலிய அணி நடுவரிடம் அப்பீல் செய்ய அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. இந்திய அணி தரப்பில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் 2 கோல்களையும், அபிஷேக் ஒரு கோலையும் போட்டு அசத்தினர். ஆஸ்திரேலிய அணிக்கு கடைசி 15 நிமிடத்தில் பெனால்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது. இதனைப் பயன்படுத்தி 2வது கோலை அந்த அணி அடிக்க மீண்டும் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | மகளிர் குத்துச்சண்டையில் ஆண்? ஒலிம்பிக்கில் பாலின சர்ச்சை... என்ன மேட்டர்?
குறிப்பாக கடைசி 10 நிமிடங்கள் திக் திக் என சென்றது. மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை ஆஸ்திரேலியா அப்போது வெளிப்படுத்தியது. இந்திய அணியின் தடுப்பு ஆட்டத்தையெல்லாம் தகர்த்து அடிக்கடி இந்திய அணியின் கோல் போஸ்டுக்கு அருகில் சென்றனர். இருப்பினும் அவர்களின் முயற்சி கோலாக மாறவில்லை. கடைசி நொடியில் கூட ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் கோல் போஸ்ட் அருகில் வந்துவிட்டது. அப்போது கோல் அடித்திருந்தால் கூட இப்போட்டி டிராவில் முடிந்திருக்க வாய்ப்பு இருந்தது. நல்வாய்ப்பாக இந்திய அணியினர் சிறப்பாக தடுத்து ஆடியதால் வெற்றி வசனமானது.
1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இல்லை என்ற சோகம் இன்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த ஒரு வெற்றியை பெற இந்திய அணி சுமார் 52 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணிக்கு ஒட்டுமொத்த இந்தியர்களும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். காலிறுதிக்கு முன்னேறியிருக்கும் இந்திய அணி, அந்த ஒரு சவாலையும் கடந்துவிட்டால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும். இதனால் இந்திய ஹாக்கி அணியின் காலிறுதி ஆட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ